Broiler Poultry Farming | பிராய்லர் கோழி வளர்ப்பு | Broiler Kozhi Valarpu

Broiler Poultry Farming, பிராய்லர் கோழி வளர்ப்பு, Broiler Kozhi Valarpu, Organic Farming Methods
Broiler Poultry Farming

Broiler Poultry Farming | பிராய்லர் கோழி வளர்ப்பு | Broiler Kozhi Valarpu: Organic Farming Methods


Broiler Poultry Farming | பிராய்லர் கோழி வளர்ப்பு | Broiler Kozhi Valarpu: Organic Farming Method | உலக அளவில் இந்தியா கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் 3வது இடத்தில் இருந்து வருகின்றது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் நிலை இருந்து வருகின்றது. தொழில் வளர்ச்சிக்கான மானியம் மற்றும் எளிமையான முறையில் தொடங்குதல் என இந்தியாவில் பல வசதி வாய்ப்புகள் இருப்பதுவே இதன் காரணமும் ஆகும்.  இந்தியாவில் பெரும்பான்மையான விவசாயிகளால் செய்துவரும் பிராய்லர் கோழி வளர்ப்பு (Broiler Poultry Farming)  இந்தியாவின் கோழி முட்டை மற்றும் இறைச்சி தேவையை போக்குவது மட்டுமில்லாது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பண்ணை விவசாயம் நாட்டின் வளர்ச்சி பாதைக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. 2017ம் ஆண்டின் உற்பத்தி அறிக்கையின் படி இந்திய மொத்த முட்டை உற்பத்தியானது 7500 கோடி (75 பில்லியன்) ஆகவும் இந்திய மொத்த பிராய்லர் கோழி வளர்ப்பு (Broiler Poultry Farming) இறைச்சியானது 42 இலட்சம் (0.42 கோடி) ஆகவும் இருக்கின்றது. 2018ற்கான அறிக்கை இன்னும் வரவில்லை எனினும் சென்ற வருடத்தின் உற்பத்தி நிலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Also - நாட்டு கோழி பண்ணை

பிராய்லர் கோழி வளர்ப்பு Broiler Poultry Farming பயன்கள் : Broiler Kozhi Valarpu


இறைச்சி கோழி வளர்பதற்கு முதலீடாக நிலம், கொட்டகை செலவு மற்றும் பராமரிப்பு செலவு மட்டுமே போதுமானதாகும். மற்றபடியான இடுபொருட்களான கோழி, தீவனம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் அல்லது ஒன்றினைந்த கோழி கறிக்கடை சங்கங்கள் போன்றவை அளித்து பின் கோழிக்கு இவ்வளவு என தரத்திற்கு ஏற்றார்போல அதற்குறிய தொகையை அளிக்கின்றனர்.குறுகிய கால வளர்ப்பு அதாவது 6லிருந்து 7 வாரங்கள் வரையாக ஆகின்றன. அதனால், பராமரிப்பின் பங்களிப்பும் பெரிதாக தெரிவதில்லை. வழமையாகவே அதிக கோழிகளின் தேவை இருப்பதனால் விற்பனைக்கென தனி கவனம் அவசியமற்றது.

அதீத தீவனத்திற்கான தேவை இருப்பதில்லை. இயல்பாகவே, குறைந்த தீவனத்தில் அதிக எடையை பெறக்கூடியனவாக  பிராய்லர் கோழி இறைச்சி உற்பத்தி இருந்து வருகிறது. ஆட்டு இறைச்சியை விட விலை குறைவும் தேவை அதிகவுமாகவும் இருக்கின்றது. முதலீடு பெரிதாக இருந்தாலும் இலாபமானது உடனடியாக பெறக்கூடியதாக இருக்கிறது. 40 நாட்களில் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பிரிவுகளை கொட்டகைக்கு ஏற்றலாம்.

Broiler Poultry Farming | பிராய்லர் கோழி வளர்ப்பு கொட்டகை அமைக்கின்ற முறைகளும் வழிமுறையும் : Broiler Kozhi Valarpu


கொட்டகை நிலத்தின் சாலைப் போக்குவரத்திற்கு எளிமையாகவும், நல்ல ரோடு வசதியை கொண்டதாகவும் பார்த்து அமைத்தல் வேண்டும். மின்சார வசதிக்காக அதிக தொலைவில்லாது அருகிலே பெருமளவு தூரத்தில் கொட்டகையானது அமைக்கப்பட வேண்டும். பிராய்லர் கோழி வளர்ப்பு (Broiler Poultry Farming) கொட்டகை அமைப்பதற்கு முதலில் உயரமான நிலங்களை தேர்ந்த்தெடுக்க வேண்டும். மழைக்காலங்களில் எந்தவிதமான மழைநீரும் தேங்கி நிற்காமல் வெள்ளம் போன்றவற்றால் பாதிக்காதவண்ணம் கொட்டகை நிலம் அமைத்தல் அவசியமாகும். நீர், மின்சாரம், ரோடு வசதி போன்றவை உள்ளவாறு ஏற்பாடு  செய்யவேண்டும். கறிக்கோழியின் சந்தை அருகில் இருக்குமாறும் கொட்டகை நிலமானது அமைக்கப்படவேண்டும்.

பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணை (Broiler Poultry Farming) ஆரம்பிப்பதற்கு முன்பாக அனுபவத்திற்காக பெரிய பண்ணைகளின்  நேர்க்காணல் அவசியமாகிறது. அப்போதுதான் புதிய உத்திகளும், மேம்படுத்த தேவைப்படுகின்ற பொருட்களிற்கான அறிமுகமும் கிடைக்கின்றது. நாம் காண்கின்ற பண்ணைகளில் முன்னேற்ற வேண்டிய தேவைகளை நம்முடைய பண்ணைகளில் அமைப்பதற்கு ஒரு முன்னோட்டமாக அமைகின்றது.

கொட்டகை கூரையானது வலுவானதாக இருக்க வேண்டும். மழைக்காலங்களிலும் பலமான காற்றடிக்கின்ற காலக்கட்டங்களிலும் பறந்திடாத வண்ணம் அமைக்கப்பட வேண்டும். மழைநீர் இறங்காமல் தவிர்க்க பழைய பேனர்கள் அல்லது போறா சாக்குகளை பயன்படுத்தலாம். கொட்டகையை இருவேறாக அமைத்தால் ஒவ்வொன்றிற்கும் குறந்தது 50 அடியாவது இடைவெளி விட வேண்டும். சூரிய ஒளியும் காற்றும் எப்போதும் நன்றாக இருக்கும் படியான நிலம் வேண்டும். மேலும், அருகிலிருக்கும் வயல் வெளி அல்லது காடுகளிலிருந்து எலி, பாம்பு மற்றும் காட்டு பன்றி ஆகியவை புகாத வண்ணமாக கொட்டகையானது அமைக்கப்பட வேண்டும்.

பிராய்லர் கோழி வளர்ப்பு (Broiler Poultry Farming) கொட்டகையினை கோழி எச்சங்கள் இல்லாமல் சுத்தம் செய்து சுவற்றில் சுண்ணாம்பு பூச வேண்டும். பின்பு பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டும். அதன் பின்புதான் அடுத்த கோழிக்குஞ்சு குழுவினை விட வேண்டும். ஆழ்கூள முறையில் உமி, மரத்தூள், தேங்காய் நார் போன்றவற்றை தூவி அடுக்குகள் அமைத்து வேலியை அமைத்தப்பின்பு தான் குஞ்சுகளை விட வேண்டும். ஆழ்கூளத்தை அவ்வபோது கிளறி விடுதல் வேண்டும். பிராய்லர் கோழி வளர்ப்பு (Broiler Poultry Farming) முறையில் ஆழ்கூளமானது ஈரமானதாக இருக்கக் கூடாது. 


பிராய்லர் கோழி வளர்ப்பு (Broiler Poultry Farming) தீவன முறை : Broiler Kozhi Valarpu

உயர்தரமான சரிவிகித தீவனத்தையே உபயோகிக்க வேண்டும். சில விவசாயிகள் அரைப்பானின் உதவியைக் கொண்டு இப்பொழுதெல்லாம் தீவனத்தை பண்ணையிலே அரைத்துக் கொள்ளவும் செய்கின்றனர். இதற்காக போதிய முன்அனுபவம் தேவைப்படுகிறது. தீவனத்தை சுத்தமான காற்றோட்டமான அறையில் சேமிக்க வேண்டும். தீவன அறை எவ்விதமான எலி போன்ற உயிரினங்கள் உட்புகாவண்ணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தீவன் பாத்திரத்தை நாமே வடிவமைத்தாலும் கோழிகளுக்கு எளிதாக எடுத்துக்கொள்ளும் படி அமைக்க வேண்டும். தீவனப்பதிவேட்டினை சரிவர கவனித்து வர வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்ட கோழி அல்லது குஞ்சுகளின் தீவன அளவை தனியே பதிவு செய்து தனிபராமரிப்பை அளிக்க வேண்டும்.


பிராய்லர் கோழி வளர்ப்பு (Broiler Poultry Farming) தண்ணீர் கொடுக்கும் முறை : Broiler Kozhi Valarpu

தண்ணீர் வசதியில் எவ்விதமான பாதிப்புமில்லாமல் ஏற்படுத்தி வைத்தல் அவசியமாகும். எப்போதும் நல்ல தூய்மையான தண்ணீரையே கொடுக்க வேண்டும். தண்ணீர் கொடுக்கும் கருவிகளின் இடைவெளியை சரியாக அமைக்க வேண்டும். அந்த கருவிகளை அவ்வபோது சுத்திகரிக்க வேண்டும். நீர் கொடுக்கின்ற பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சூடான, அதிக வெப்பமான தண்ணீரை கோழிகளுக்கு கொடுக்க கூடாது. எனவே பண்ணையின் (Broiler Poultry Farming) கூரைக்கு மேல் எல்லாம் தண்ணீர் டேங்குகளை அமைத்தலை தவிர்க்க வேண்டும். கோடைகாலங்களில் குளிர்ந்த நீரையே கோழிகளுக்கு கொடுக்க வேண்டும். 


பிராய்லர் கோழி வளர்ப்பு (Broiler Poultry Farming) நோய்தடுப்பு முறை : Broiler Kozhi Valarpu

கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கு முதல் வழியே சுகாதாரத்தோடு கூடிய கொட்டகை சூழிநிலை, சரிவிகித தீவனம், நல்ல குடிநீர் வசதி ஆகியவை நல்ல முறையில் அமைந்திருத்தல் வேண்டும். தேவையில்லாத வெளியாட்களை பண்ணைக்கு (Broiler Poultry Farming) உள்ளே அனுமதிக்கக் கூடாது. அப்படியே அனுமதித்தாலும், அவர்களுக்கு கால்களில் கிருமிநாசியை தெளித்து விட வேண்டும். கோழிகளின் நோய் தடுப்பிற்கான மருந்து அட்டவணையை கண்டிப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். தடுப்பு மருந்துகளை நல்ல தரமுள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். கால்நடை மையத்தை அணுகி அங்கு பரிந்துரைக்கப்படுகின்ற தயாரிப்பாளர்களின் மருந்தை உபயோகித்தல் மிக முக்கியமானது. சேமித்து வைக்கப்படுகின்ற தடுப்பூ மருந்துகளை தீவன அறையில் வைத்தல் சிறந்தது.

நோய் தடுப்பூ மருந்தின் காலாவதியாகும் காலத்தை சரி செய்தல் அவசியமாகும். அப்படி காலாவதியான மருந்துகளை களைய வேண்டும். நோய்வாய்பட்டு போன கோழிகளை பண்ணையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்படி நோயினால் இறந்து போகின்ற கோழிகளை புதைக்கவோ எரிக்கவோ செய்து விட வேண்டும். பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணையின் (Broiler Poultry Farming) கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றிட வேண்டும். இறப்பு விகிதத்தினை பதிவேட்டில் பதிவு செய்தல் அவசியமாகும். எலிகளுக்கான பொறிகளை வழமையாக வைக்க வேண்டும். அவைகளே நோய்க் கிருமிகளை அதிகமாக கோழிகளுக்கு பரப்புகின்றன.

தினசரி மருந்து கலந்த நீரையே கோழிகளுக்கு பயன்படுத்த வேண்டும். முன்தின தண்ணீரையெல்லாம் அப்புறப்படுத்தி விட வேண்டும். பொதுவான நோய்த் தாக்கங்களால் கோழிகளுக்கு உயிரிளப்பு ஏற்படாது. ஆனால் கோழி எடையானது மற்றவையை காட்டிலும் குறைந்து காணப்படும். கண்காணிப்பின் முக்கியத்துவமும் பதிவேடுமே முறையான பராமரிப்பாகும். அப்படி பராமரிப்பதினால் கோழிகளின் நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

Broiler Poultry Farming - பிராய்லர் கோழி வளர்ப்பு விற்பனை சந்தை கையாளும் முறை : Broiler Kozhi Valarpu

கறிக்கோழி இறைச்சியின் சந்தை வாய்ப்பிற்கு ஏதுவாக பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணை Broiler Poultry Farming அருகில் இருக்க வேண்டும். விற்பனை சந்தையின் நிலவரத்தை அன்றாடம் கவனித்து விற்பனைக்கான சரியான விலையன்று ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனாலும், கோழிகளை 6 வாரங்களுக்கு உள்ளாகவே விற்பனைக்கென அனுப்பி வைத்து விட வேண்டும். பிராய்லர் கோழி இறைச்சியை விற்கும் போது சுத்தப்படுத்தப்பட்ட கருவிகளையே உபயோகிக்க வேண்டும். கறிக்கோழி இறைச்சியை பதப்படுத்தி வைத்தால் விரைவாக விற்கப்பட வேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அதற்கென பதப்படுத்தும் முறையை கையாளப்பட வேண்டும்.


பிராய்லர் கோழி வளர்ப்பு Broiler Poultry Farming - கவனிக்க வேண்டியவைகள் : Broiler Kozhi Valarpu

பிராய்லர் கோழி பண்ணையானது (Broiler Poultry Farming) கோழிக் குஞ்சுகள் இடுவதற்கு முன்னதாக சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும். கிருமிநாசினியை உபயோகித்து சுத்திகரிக்கப்படல் வேண்டும். பிராய்லர் கோழி வளர்ப்பு (Broiler Poultry Farming) நாட்டு கோழியை போன்று வெப்பநிலை தாங்குதலற்று நாமாகவே குறிப்பிட்ட வெப்பநிலையை சரியாக பராமரித்து வர வேண்டும். பிராய்லர் கோழி கொட்டகையின் அறை வெப்பநிலையானது 27 அல்லது 28 ஆக இருக்கும்படியாக பராமரிப்பை ஏற்படுத்துதல் முக்கியமாகும். அதற்கென தெளிப்பு நீர்பாசனத்தை கொட்டகையின் மீது அமைக்கப்பட வேண்டும். பெரும்பாலான பிராய்லர் கோழி (Broiler Poultry Farming) கொட்டகைக்காக பயன்படுத்தப்படும் ஸ்டீல் தட்டுகள் வெப்பத்தை ஈர்க்கின்றன. எனவே அதன் கீழாக கூரை மேய்தல் வெப்பநிலையை சரியாக பராமரிக்க இயலும்.

கோழிக்குஞ்சுகளை கொட்டகையில் இறக்கிய பின் குஞ்சுகள் தண்ணீர் அருந்தும் பிளாஸ்டிக் டப்பாவில் சக்கரை கரைசல் அல்லது குளுக்கோஸினை கொடுப்பது தண்ணீர் அருந்துதலின் விருப்பை மேம்படுத்தும். கோழிக்கு 50 கிராம் குளுக்கோஸ் என கணக்கிட்டு மொத்த கோழி குஞ்சுகளுக்கும் கொடுக்க வேண்டும். தீவன முறைகள் வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த பிராய்லர் கோழி வளர்ப்பு முறையில் தனியார் நிறுவனத்தின் மூலம் கொடுக்கப்பட்டுவிடும். முதல் பத்து, இரண்டாம் பத்து என பிரித்து தீவன முறையை வளர்ச்சிக்கு ஏற்றவாறு அளவினை அதிகப்படுத்தி அளவு மற்றும் வளர்ச்சி முறை அட்டவணையை பார்த்து அதன்படி அளிக்க வேண்டும்.


Broiler Poultry Farming, பிராய்லர் கோழி வளர்ப்பு, Broiler Kozhi Valarpu பற்றிய ஒரு நீள் அளவிலான முன்னோட்டத்தை இந்த பதிவில் பார்த்தோம். வரவிருக்கும் பதிவுகளில் கறிக்கோழி பராமரிப்பு, தீவன முறை முழு விவரம் என அனைத்தையும் காணலாம். Organic Farming Methods பற்றி தெரிந்துகொள்ள TamilFarming-யை தொடரவும். இந்த பதிவினை பகிர்ந்து உதவுங்கள் மேலும், விளக்கங்களுக்கு கீழே கமென்ட் செய்யவும். 1/Post a Comment/Comments

  1. Ponnai valarpil Evlo selavu aagum..? Broiler kozhi ponnai amaikka Sq.feet ku evlo aagum nu solluga

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post