Carp Fish Farming | கெண்டை மீன் வளர்ப்பு | Kendai Meen Valarpu

Carp Fish Farming, கெண்டை மீன் வளர்ப்பு, Kendai Meen Valarpu
Carp Fish Farming

Carp Fish Farming | கெண்டை மீன் வளர்ப்பு | Kendai Meen Valarpu: Organic Farming Methods



Carp Fish Farming | கெண்டை மீன் வளர்ப்பு | Kendai Meen Valarpu இந்தியாவை பொறுத்தவரையில் நன்னீர் மீன் வளர்ப்பிற்கு என பலவகை மீன் இனங்கள் ஏற்றவையாக இருந்து வந்து கொண்டுருக்கின்றன. அதிலும் கெண்டை, விரால், நன்னீர் இறால் இனங்கள் மற்றும் கெளுத்தி போன்றவை முக்கியமானவையாகும். அப்படி இருந்தாலும் பல காரணங்களினால் நன்னீர் மீன் வளர்ப்பின் மூலமாக பெறுகின்ற உற்பத்தியில் 85 சதவீத்திற்கும் அதிகமாகவே உற்பத்தி கெண்டை மீன்கள் மூலமே பெறப்படுகின்றது. அதிலும் கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய உள்நாட்டு பெருங்கெண்டை உற்பத்தி நிலை உச்சத்தில் இருக்கிறது. மற்ற மீன் வளர்ப்பு (Fish Farming) இனங்களின் குஞ்சுகளானது பொருளாதார ரீதியில் தேவையின் அளவிற்கு உற்பத்தி செய்யப்படாத நிலையில் உள்ளதாலும், அவைகளின் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் உதவிகள் சரியாக கிட்டாமல் இருப்பதுமே இதன் முக்கியக் காரணமாகும்.


கெண்டை மீன் வளர்ப்பு - Carp Fish Farming -  இனங்கள்:


இந்தியாவை பொறுத்தமட்டில் மூன்று வகையான உள்நாட்டு பெருங்கெண்டை இனங்களும், மூன்று வகையான அயல்நாட்டு பெருங்கெண்டை இனங்களுமே வளர்க்கப்படுகின்றன - Kendai Meen Valarpu
  • ரோகு (Carp Fish Farming)
  • கட்லா (Carp Fish Farming)
  • மிர்கால் (Carp Fish Farming)

இந்த மூன்று உள்நாட்டு இனங்களே அதிகமாக வளர்க்கப்படும் பெருங்கெண்டை (Carp Fish Farming) இனங்களாகும். தமிழகத்தில் அதிகமான அளவில் கிடைக்கும் குஞ்சு இனங்களும் இவைகளே.

கெண்டை மீன் வளர்ப்பு முக்கிய அம்சங்கள்: Kendai Meen Valarpu


வேளாண் தொழிலான மீன் வளர்ப்பில் கெண்டை மீன் வளர்ப்பு (Carp Fish Farming) என்பது  மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது. இந்த வகை மீன் வளர்ப்பானது அதிகமாக வளர்க்கப்படுவதற்கு காரணம் இதன் சிறப்பு அம்சங்களே ஆகும்.

  • நம் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு மிகவும் உகந்ததாகவும் அனுசரித்து வளரக்கூடியதாகவும் கெண்டை மீன்கள் இருந்து வருகின்றன.
  • நம்முடைய சூழலில் மிக குறுகிய காலத்திலே வேகமாக வளர்ந்து விற்பனைக்கான எடையைப் பெறுமளவு தன்மையுள்ளவையாகும்.
  • கெண்டை மீன் வளர்ப்பு (Carp Fish Farming) மற்றும் குஞ்சுகள் உற்பத்தி செய்கின்ற தொழில் நுட்பங்கள் இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மீன் குஞ்சுகள் கிடைப்பதில் தட்டுப்பாடுகள் ஏற்படுவதில்லை.
  • மீன் தேவை நம் நாட்டிலேயே அதிகமாக இருப்பதனால் விற்பனை செய்தவதில் பெரிய கடினம் இருப்பதில்லை.
  • மீன்களின் கழிவுகள், தாவரப்பொருட்கள் மற்றும் சிறிய விலங்குகளை உண்ணும் தன்மை கெண்டை மீன்களுக்கு இருப்பதனால் குறைந்த செலவில் தீவனமும் அதிக அளவில் உற்பத்தியும் செய்ய இயலும். இதற்கென அதிக முதலீடு தேவையில்லை.
  • இவ்வகை மீன்கள் சுற்றுப்புற சூழலை எதிர்கொள்வது மட்டுமில்லாது, பல நோய்களின் எதிர்ப்பு சக்தி தன்மையை அதிகமாக இயற்கையாகவே கொண்டுள்ளது. இறப்பு விகிதம் அதிக அளவில் இருக்காது எனவே, நஷ்டத்திற்கு இடமிருக்காது.
  • தனி இன வளர்ப்பை விட பல கெண்டை மீன் இனங்களை ஒரே குளத்தில் இருக்கச் செய்து வளர்ப்பதனால் பல இன மீன் வளர்ப்பு (Fish Farming) முறையாகவே மேற்கொள்ளப்படும். இதனையே கூட்டு மீன் வளர்ப்பு என்று கூறுகிறோம். 

கெண்டை மீன் வளர்ப்பு - மீன்களின் சத்துகளும் விற்பனை வசதியும்  : Kendai Meen Valarpu

கெண்டை மீன்களில் உள்ள கொழுப்புகள் நம் உடலிற்கும் ஆரோக்கியத்திற்கும்  எந்தவிதமான கேடு விளைவிக்க கூடியது இல்லை. கெண்டை மீன்கள் நம் தேவைக்கான ஊட்டச்சத்துக்களையும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத இயற்கையான குணாதிசய தன்மையை கொண்டுள்ளதால் ஆரோக்கியமான சிறந்த உணவாக கருதப்படுகின்றன. கொழுப்பு சத்து சுவையாகவும், உடலுக்கு சக்தியையும் அளிக்கக்கூடிய உணவாக இருந்த போதிலும், ஆடு மற்றும் மாடுகளின் இறைச்சிகளில் காணப்படும் கொழுப்புகளில் உடலுக்கு கேடு விளைவிக்கின்ற கொழுப்பு நிறைய இருக்கிறது. ஆகவே, இந்த வகை கால்நடை இறைச்சிகளை உண்ணுவதனால் மாரடைப்பு மற்றும் பல இருதய நோய்கள் ஏற்படுகிறது. இதனாலயே, வயது முதிர்ந்தவர்கள் பெரும்பாலும் மீன்களையே இறைச்சிக்காக எடுத்துக்கொள்கிறார்கள். கெண்டை மீனானது எளிதாக செரிமானமாக கூடியதாக இருக்கின்றது. உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதும் மீன்கள் தான். உலகில் எங்கு சென்றாலும் மீன்களுக்கு என தனி இடம் உண்டு.

Carp Fish Farming | கெண்டை மீன் வளர்ப்பு | Kendai Meen Valarpu பற்றிய ஒர் சிறிய அறிமுகத்தைக் கண்டோம். மேலும், வரவிருக்கும் பதிவுகளில் கெண்டை மீன் பண்ணை அமைப்பு (Kendai Meen Valarpu), கெண்டை மீன் பண்ணை வளர்ப்பு முறை, பராமரிப்பு மற்றும் சந்தை நிலை பற்றிக் காணலாம். மேலும் உங்களுடைய கெண்டை மீன் குஞ்சுளை விற்பனை செய்ய கீழே கமென்ட் இடவும் அல்லது எங்கள் மின் அஞ்சலுக்கு மெயில் செய்யவும். உங்களுக்கு தேவையான தகவல்களை பற்றியும் மற்றும் எங்கள் தவறுகளை சுட்டிகாட்டவும் கீழே உங்கள் கமென்ட்டினை பதிவு செய்யுங்கள். Organic Farming Methods பற்றிய முழுமையாக தெரிந்துகொள்ள TamilFarming-யை அணுகுங்கள். இந்த பதிவினை பகிர்ந்து உதவுங்கள் மேலும், விளக்கங்களுக்கு கீழே கமென்ட் செய்யவும். 

Post a Comment

1 Comments

  1. Kendal meen valarpu tamilnadu la enga athigam nu sollugalen?

    ReplyDelete