Country Chicken Farming In Tamil | நாட்டு கோழி பண்ணை மற்றும் வளர்ப்பு | Nattu Kozhi Pannai

Country Chicken Farming, நாட்டு கோழி பண்ணை, Nattu Kozhi Pannai, Organic Farming Method
Country Chicken Farm

Country Chicken Farming Ideas In Tamil: நாட்டு கோழி பண்ணை மற்றும் வளர்ப்பு – Nattu Kozhi Pannai


Country Chicken Farming In Tamil | Nattu Kozhi Pannai | நாட்டு கோழி பண்ணை | நாட்டு கோழிகளானது பிராய்லர் கோழிகளைக் காட்டிலும் அதிகமாக விரும்பப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சத்தான இறைச்சிவகைகளில் நாட்டுக் கோழியையே மக்கள் குறிக்கின்றனர். அதே நேரத்தில் கறிக்கோழி எனப்படும் பிராய்லர் கோழிகள் அதிக நோய் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதால் பெரும்பாலானோர் நாட்டுக்கோழிகளையே விரும்பி உண்கின்றனர். இதன் காரணமாக நாட்டு கோழி வளர்ப்பிற்கு தனி மவுசு இருந்து வருகிறது. அதிக விலைக்கு விற்கப்படுவதும் குறைந்த பராமரிப்பும் நம்நாட்டின் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறும் இருப்பதாலயே பிராய்லர் கோழிகளைக் காட்டிலும் நாட்டு கோழி பண்ணைகளின் (Country Chicken Farming) எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

நாட்டு கோழி பண்ணை வளர்ப்பு துவக்கநிலை


இந்தியாவிலுள்ள கிராமங்களில் பொதுவாகவே நாட்டுக்கோழிகளை வீடுகளில் சிறிய அளவிலான கூடுகளை அமைத்து பராமரித்து நாட்டுக் கோழி முட்டைகளுக்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் வழமை இருந்து வருகிறது.  இன்றும் கூட இம்முறை தொடர்ந்து வருகிறது. ஆனால், இந்த வீட்டு பண்ணை முறையில் அவரவர் வீடுகளுக்கு முட்டைகளையும், இறைச்சிகளையும் பயன்படுத்தவே போதிய உற்பத்தி இருக்காது. காரணம், குறைந்த எண்ணிக்கையிலான கோழிகள் மட்டுமே வளர்க்ககூடிய சிக்கலான குறுகிய இடமும் போதுமான பராமரிப்பும் இல்லாததுதான். ஆனால், இப்போதைய நவீன உலகில் நாட்டு கோழியானது இறைச்சி சந்தையில் முதன்மையாக இருக்கிறது.  இதன் காரணமாகவே, நாட்டுக்கோழி வளர்ப்பில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். பல பெரிய பண்ணைகளிலிருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான கோழிகள் ஹோட்டல்களுக்கு வந்த வண்ணம் இருந்தாலும் நாட்டு கோழி பண்ணைகளின் புதிய வரவுகளுக்கு இன்றும் பஞ்சமில்லை. வரக்கூடிய நாட்களில் இந்நிலையில் பெரிய முன்னேற்றம் காணப்படும்.

நாட்டு கோழி வளர்ப்பானது இறைச்சி கோழி என அழைக்கப்படுகின்ற பிராய்லர் கோழி வளர்ப்பினை விட எளிமையாகவும், தொழில் நோக்குப் பார்வையில் சிறந்தும் விளங்குகிறது. மேலும் இவற்றினை இறைச்சிக்காக வளர்க்கும் நோக்கமானது சந்தைமுறை விற்பனையில் மிக இலாபகரமானது. ஆனால், அடைகாத்து முட்டைப் பெற்று மேலும் கோழிக்குஞ்சுகளாக வளர்க்கும் பராமரிப்பினில் அதிக இலாபமும் அதே நேரத்தில், அதிக பராமரிப்பும் அவசியமாகிறது. தொழில் முனைவு கோட்பாட்டின் விளிம்புநிலை படி இறைச்சி பயன்பாட்டிற்கான நாட்டு கோழி பண்ணை அமைத்தலே சிறந்ததாகும்.

நாட்டு கோழி பண்ணை வளர்ப்பிற்கான இனங்களை தேர்ந்த்தெடுத்தல்


அசில்கோழி இனம்: இந்திய-ஆந்திர பகுதியைச் சேர்ந்தவையாகும். அசில் கோழி இனமானது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றத்தைக் கொண்டதாக தெரிகின்றன. தமிழகத்தில் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் அசில் கோழி வளர்ப்பு பண்ணையானது அதிகமாக காணப்படுகிறது. இந்த இனக்கோழிகளை அதிகமாக சண்டைக்காக பயன்படுத்துகின்றனர். இதனை சண்டைக்கோழி எனவும் அழைக்கின்றனர். 4 கிலோ வரையிலான எடையை  அசில் இன சேவல்கள் பெற்றிருக்கும். 3 கிலோ வரையிலான எடையை அசில் இன கோழிகள் பெற்றிருக்கும்.
முட்டை உற்பத்திக்கான சிறுவெடை கோழி இனம்: சிறுவெடை கோழி இனமானது முட்டை உற்பத்திக்கு என பிரத்யேகமாக தமிழகத்தில் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இனமாகும். முட்டை உற்பத்தியின் காரணமாக கோழியின் எடை மிகவும் குறைவாக 1 கிலோ அளவிலே இருக்கும்.
இறைச்சிக்கான பெருவெடைக்கோழி இனம்: இவ்வகை இனக்கோழிகளானது இறைச்சிக்கு என தனியே வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் இந்த இனக்கோழிகள் தான் தமிழகத்தின் அதிகமான நாட்டு கோழி பண்ணைகளில் காணப்படுகின்றன.
READ THIS - நாட்டு கோழி இனங்கள் பற்றிய முழுதொகுப்பு
கருப்புக்கோழி எனும் கடக்நாத் இனம்: இறைச்சிக்காக வளர்க்கப்படும் இந்த இனமானது வட நாட்டைச் சேர்ந்தது. இக்கோழிகள் கரு நிறத்தில் காணப்படுவதாலும், இறைச்சியும் கருப்பாக இருப்பதாலும் மக்களிடையே பெரிதான வரவேற்பை இந்த இனக் கோழிகள் பெறவில்லை. ஆயினும், கடக்நாத் கோழிகளின் பண்ணைகளும் தமிழகத்தில் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன.

முட்டைக்கான நாட்டு கோழி வளர்ப்பு - Nattu Kozhi Pannai


சராசரியாக நன்றாக வளர்ந்த கோழிகள் 25 வாரம் முதல் 30 வாரங்களுக்கு உள்ளாகவே முட்டையிட துவங்கிவிடும். சேவல்கள் 20 வார வயதினில் சிவப்பு நிறக் கொண்டையை பெற்றிருக்கும். கொக்கரிக்கின்ற சேவல்களின் வாயிலாகவே இனவிருத்திக்கான தயாராதலின் அறிகுறியை கண்டுபிடிக்கலாம். செழிப்பான தீவங்கள் கிடைத்தால் 20 வாரங்களில் கூட கோழிகள் முட்டையிட சாத்தியங்கள் இருக்கின்றன.  நாட்டு கோழிகள் முதலில் சிறிய அளவிலான முட்டை ஓடு போன்ற அமைப்பில் முட்டையிடும். அதன் பிறகே பெரிய முட்டைகளிட ஆரம்பிக்கும். கேவுதல் எனக்கூறப்படும் சத்தத்தினை முட்டையிடுகின்ற கோழிகள் எழுப்பும். முட்டையிட்ட கோழிகளிடமிருந்து கோழிகளைப் பிரித்து தனியே வேறு இடத்தில் வைக்க வேண்டும். அந்த இடமானது குளிர்ச்சியாக இருத்தல் அவசியம். மேலும், மரப்பெட்டி அல்லது மண்பானையின் உள்ளே முட்டைகளை உமி அல்லது தேங்காய் நார்களை பரப்பி அதன் மீது வைக்கலாம். சராசரியாக ஒரு கோழி பத்து முதல் இருபது நாட்களில் முட்டையிடும். ஆண்டிற்கு 60 முதல் 120 வரையிலான எண்ணிக்கையில் நாட்டுக்கோழியானது முட்டையிடும்.

அடைக்காக்கும் நாட்டு கோழி வளர்ப்பு


கோழிகளை அடைகாக்க வைப்பதற்கு நாட்டு கோழிகளை முட்டைகளின் மேல் வைக்க வேண்டும். கூடை அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் நன்றாக சுத்தப்படுத்தி அதனுடைய பாதி அளவிற்கு மரத்தூள், உமி அல்லது கடலைத்தோலை நிரப்பி பின் முட்டைகளை அதன் மீது வைக்க வேண்டும். 15 முட்டைகள் வரை ஒரு கூடைக்குள் இருக்குமாறு வைக்க வேண்டும். அந்த முட்டைகளின் மேல் அமர்கின்ற அடைகாக்கின்ற கோழிகளை நாம் நெருங்கினால் அவை ஒளி எழுப்பும். அடைகாக துவங்கிய 21 நாட்களில் நாட்டு கோழியானது முட்டையை குஞ்சாக பொறித்துவிடும். அடைகாக்கும் கோழியானது 2 முதல் 3 நாட்கள் வரை தொடர்ந்து அடையில் உட்கார்ந்து இருக்கும். அதன் பிறகு, தீவனமுண்டு, தண்ணீர் அருந்தி, எச்சமிட்டு மீண்டும் அடையில் அமரும்.

நீர் மற்றும் தீவனம் அடைகாக்கின்ற தாய்கோழிகளுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும். தினசரி சரியாக அடைகாக்கும் தாய்கோழியையும் முட்டையையும் பராமரித்து வர வேண்டும். பராமரிப்பின் மூலம் பழகியவர் தாய்கோழியை அகற்றி முட்டையின் நிலையை பரிசோதிக்கலாம். தாய்கோழிகள் தங்களுக்கு தேவையான வெப்பத்தை இறகுகளுக்குள் வைத்திருக்கும். குஞ்சுகளையும் கோழிகளையும் இரவு நேரங்களில் அடைத்து வைக்க வேண்டும். காகம், பருந்து, கழுகு முதலியன கண்களில் குஞ்சுகள் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இன்குபேட்டரும், கேட்ச்சரும் – Country Chicken Farming


முதலில் பொரிக்கப்படுகின்ற இரண்டு முட்டைகள் குஞ்சுகளாக்கப்படுவதற்கு தகுதியற்றவையாகும். மேலும் எடைக்குறைவாக உள்ள முட்டைகள், ஒழுங்கற்ற அமைப்பையுடைய முட்டைகளை அகற்றிவிட வேண்டும். மீதமுள்ள சேகரிக்கப்பட்ட முட்டைகளை இன்குபேட்டர் அறையில் இன்குபேட்டர் மெசினில் 99.6 டிகிரி  சென்டிகிரேடு வெப்பமும், 70 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதமும் இருக்குமாறு வைக்க வேண்டும். பத்தாயிரம் முட்டைகள் வரை ஒரே நேரத்தில் இன்குபேட்டரில் வைக்கலாம். அதற்கு பிறகு மூன்று நாட்கள் கேட்சர் மெசினில் வைத்தால் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளியேவரும்.

நாட்டு கோழி குஞ்சுகளை வளர்க்கும் முறை - Country Chicken Farming


குஞ்சுகளுக்கு என தனியாக ஒரு கொட்டகையை அமைக்க வேண்டும். அதை புரூடர் என்ற முறையை கடைபிடிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கொட்டகையின் அமைப்பானது 100 குஞ்சுகளுக்கு 10அடி நீளமும் 2அடி உயரமும் இருக்கின்ற வளையத்தினை உருவாக்க வேண்டும். சுவறானது அதிகமாக காற்று புகாமல் இருக்குமாறு நல்ல தடிமனான அமைப்பினை கொண்டுருக்க வேண்டும். கோடைகாலங்களில் 100 குஞ்சுகளுக்கு 100 வாட்ஸ் பல்பு ஒன்றையும் குளிர்காலத்தில் 200 குஞ்சுகளுக்கு 100 வாட்ஸ் பல்புகள் மூன்றும் பயன்படுத்தப்பட வேண்டும். அப்படி அமைக்கப்பட்டால் தான் குஞ்சுகளுக்கு சரியான அளவில் வெப்பமானது கிடைக்கும். மேலும், உமி, மரத்தூள் அல்லது கடலைத்தோலை பயன்படுத்தி ஆழ்கூளம் போன்று அமைக்க வேண்டும். அதற்கு மேல் தினசரி கழிவு நீக்க ஒரு காகிதத்தை உபயோகிக்கலாம். அதனை சரிவர பராமரிக்க வேண்டும். இப்படியாக இருபது நாட்களுக்கு இந்த அறையில் குஞ்சுகளை வளர்க்க வேண்டும்.

நாட்டுக்கோழிகளை வளர்க்கும் முறைகள்Country Chicken Farming 


மேய்ச்சல் என்ற கட்டுப்பாடற்ற வீடுகளில் வளர்த்தல் ஒன்று. மற்றொன்று பண்ணை அமைப்பு முறையாகும். நாட்டுக்கோழி பண்ணை  அமைப்பு முறையில் கூடாரம் போன்ற செட் போட்டு அதில் கோழிகளுக்கு தீவனத்தையும், தண்ணிர் வசதியையும் ஏற்படுத்தி தருவதாகும். பண்ணை வளர்ப்பில் அதீத இலாபமும் கண்காணிப்பும் தேவைப்படுகிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் புறக்கடை வளர்ப்பு என்ற வீடுகளில் வளர்ப்பது போன்ற திறந்தவெளி மேய்ச்சலுடன் கூடிய பண்ணை வளர்ப்பு முறையையும் பின்பற்றுகின்றனர். இந்த புறக்கடை வளர்ப்பிற்கு அதிக அளவு முதலீடு அவசியமில்லை என்றாலும் பண்ணை வளர்ப்பைப் போன்றே அதிக இடவசதி அவசியமாகிறது. அதிக அளவிலாக அதாவது ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இம்முறை உகந்தது. ஏனென்றால் புறக்கடை வளர்ப்பில் இயற்கையாகவே கோழிகளுக்கு தீவனம் கிடைக்கின்றது அதே நேரத்தில் கோழிகள் ஆரோக்கியமானதாகவும் எடை மிகுதியாகவும் காணப்படுகின்றன. எதுவாகினும், வணிகரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பிற்க்கு சிறந்த முறை பண்ணை வளர்ப்பு முறையே ஆகும்.

கோழிக்குஞ்சுகளை அறையில் வளர்த்த பிறகு மீதமுள்ள நாட்களுக்கு பெரிய பண்ணையில் வளர்ப்பதற்கு கொட்டகை தரையில் மரத்தூள் அல்லது கடலைத்தோல் கொண்டு நிரப்பி விட வேண்டும். அதன் அளவு 2 லிருந்து 4 இன்ச் வரை இருக்கப்பட வேண்டும். மேலும், அதனை அசுத்தமடைய விடாது அவ்வபோது கிளறி விட வேண்டும். 30 நாட்களில் கோழிக்குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்டி விட வேண்டும். அப்போதுதான் கோழிகளுக்குள்ளான சண்டைகளில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். கோழிகளை 100 நாட்கள் வரையிலும் சேவல்களை 80 நாட்களிலும் வளர்த்து சந்தைகளுக்கு அனுப்பி விட வேண்டும். அதற்கு மேலான நாட்கள் வளர்ந்தால் தீவனத்திற்கான செலவு அதிகமாகி இலாபத்திற்கு பேராபத்து ஆகிவிடும்.

ஒரு வார வயது முதல் ஏழு வார வயது வரை நாட்டு கோழி குஞ்சுகள் பராமரிப்பு: இந்த பருவமானது இளம் நாட்டுக்கோழி குஞ்சுகளின் வளர்ப்பு பருவமாகும். அடைக்காப்பன்களை அமைத்த பின்பு கோழிகுஞ்சுகளை இறக்க வேண்டும். 300 நாட்டு கோழி குஞ்சுகள் வளரும் வகையில் அமைக்கப்பட்ட அடைக்காப்பன்களானது 95 பாரன்ஹீட் வெப்பத்தினை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். இந்த நிலையில் உடைக்கப்பட்ட கம்பு, அரிசி, சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றை குஞ்சுகளின் தீவனமாக கொடுக்கலாம். வளர் குஞ்சுகளுக்கு டாக்சி சைக்கிலின், நியோ மைசின், செபலேக்சின் ஆகிய நோய்தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும், குடிக்கின்ற நீரானது வெதுவெதுப்பாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்.

எட்டு முதல் பதினெட்டு வார வளர் நாட்டு கோழிகளின் பராமரிப்பு: வளர்பருவ கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே கோழி அல்லது சேவலின் எடைத்தன்மையும் அமைந்திருக்கும். சரிவிகித தீவனத்தின் வாயிலாக சரியான அளவில் புரதசத்து கிடைக்கிறதா என கண்டறிய வேண்டும். நார்சத்தானது 8 சதவிகிதமும், எரிசக்தியானது 2700 கி/கலோரி கிடைக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். மெத்ரின் என்ற மருந்தினை பதினேழாவது வாரத்தில் நீருடன் கலந்து கோழியின் தலைப்பகுதியை அதில் முக்கி எடுக்க வேண்டும். அப்போது தான், நாட்டுக்கோழிகளில் காணப்படும் பேன், செல் முதலிய ஒட்டுண்ணிகள் ஒழியும். மேலும், அந்த கரைசலை பண்ணையின் கொட்டகை தரையிலும் தெளித்து விட வேண்டும். என்ரோ ப்ளாக்சஸினை சுவாச கோளாறு ஏற்பட்டால் நீரில் கலந்து கொடுக்க வேண்டும்.

தட்வவெட்ப மாறுதல்கால நாட்டு கோழி பண்ணை பராமரிப்பு - Nattu Kozhi Pannai


வெப்பமிகுந்த கோடைகாலங்களில்: கோடைகாலங்களில் பஞ்சமே நீர் தான். ஆனால், நாட்டு கோழி வளர்ப்பினை பொறுத்த வரையில் நீருக்கான தட்டுப்பாடு என்ற சொல்லே இருக்க கூடாது. ஏனென்றால், நாட்டு கோழிகள் தீவனமின்றிக்கூட வாழ்ந்து விடும். ஆனால், நீரின்றி அவை வாழாது. நல்ல எடைக்காக வளர்க்கப்படும் கோழியானது தீவனத்திற்கு இரு மடங்கு குடிநீரைக் குடிக்கும். பறவையினத்திற்கே உடலில் வியர்வை வெளியேற்ற எந்தவிதமான சுரப்பிகளும் இயற்கையாகவே கிடையாது. ஆகவே, கோழிகள் தங்களின் மூச்சுக்காற்றின் வாயிலாக அவைகளின் வெப்பத்தினை தணித்துக்கொள்ளும். இதன் காரணமாகவே, கோழிகள் கோடைகளில் அதீத அளவில் தண்ணீரைக் குடிக்கின்றன. வெப்ப மூச்சுத்திணறலும் சில கோழிகளுக்கு ஏற்படுவதற்கு காரணம் இந்த தண்ணீர் தான். இதுமாதிரியான நேரங்களில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை கரைசல் கொடுப்பதனால் வெப்ப மூச்சு திண்றல் நின்று தண்ணீர் குடிக்கும் எண்ணமும் மேலோங்கும்.
READ MORE - பிராய்லர் கோழி வளர்ப்பு
 குளிர்காலங்களில்: குளிர்நேரங்களில் கொட்டகையின் தரைப்பகுதி மிகவும் குளிரானதாக இருக்கும். இதனைத் தவிர்க்க ஆழ்கூளத்தில் பயன்படுத்துகின்ற உமி, மரத்தூள் அல்லது நிலக்கடலை தோல் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு தரையில் பரப்பி குளிரைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், ஆழ்கூளத்தை அவ்வபோது கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கூளமானது அதிக கெட்டித்தன்மையுடன் காணப்பட்டால், அமோனியா வாயுவானது உருவாகி கோழிகளின் கண் எரிச்சலுக்கும், இரத்தக் கழிச்சல் போன்ற நோய்க் காரணிகளுக்கும் காரணங்களாகின்றன. எனவே, ஆழ்கூள ஈரப்பதத்தை 25 சதவிகிதமாக பராமரித்து வர வேண்டும்.

நாட்டு கோழி பண்ணைக்கான ஆரம்ப முதலீடும், கொள்முதலும் - Nattu Kozhi Pannai


பலரும் சிறிய அளவிலான முதலீட்டில் வீட்டு பண்ணை முறையில் 10 கோழிகள் போன்று தொடங்கி பெரிய அளவிலான 10,000 கோழிகளை வளர்க்கும் பண்ணைகளையும் அமைத்துள்ளனர். நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெரிய அளவிலான பிராய்லர் மற்றும் நாட்டு கோழி பண்ணைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. தென்தமிழகத்தில் புதியதாக பண்ணை துவங்குபவர்கள் ஈரோடு, நாமக்கல்லில் இருந்துதான் தாய்க்கோழிகளையும், நாட்டுக்கோழி முட்டைகளையும், குஞ்சுகளையும் வாங்கிவருகின்றனர். அதிகமான விவசாயிகளும் கால்நடை பண்ணை தொழிலில் குதிக்கும் போது நாட்டுக் கோழி வளர்ப்பில் தான் தீவிரம் காட்டுகின்றனர். பண்ணை அமைப்பு என்று வரும்போது தங்களுடைய சொந்த நிலங்களில்  செட்டினை அமைத்துக் கொள்கின்றனர். நாட்டு கோழி பண்ணை அமைப்பதற்கு சிறிது அதிக அளவிலான முதலீடு தேவைப்படுவதனால் பண்ணை அமைய இருக்கும் நிலமானது சொந்தமாக இருப்பது நலம்.

பண்ணை அமைத்து பெரிய அளவிலான இலாபம் பெற வேண்டும் என்று முடிவு எடுத்தால் முதலீடு என்பது அதிக அளவில் தேவைப்படும். பண்ணை  அமைப்பதற்கு முதலில் நாம் வளர்க்கப்போகும் கோழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே முதலீடு தேவைப்படுகின்றது. ஒரு நாட்டு கோழிக்கு ஒரு சதுரஅடி என்ற விகிதத்தில் ஒரு 5000 கோழிகளின் வளர்ப்பிற்கு தேவையான 5000 சதுரஅடிக்கு 6,00,000 ரூபாய் வரையிலாகின்றது. ஒரு சிறந்த நாட்டுக் கோழி பண்ணையின் கூடாரம் அமைப்பினை இந்த முதலீட்டின் மூலமாக அடையமுடியும். பண்ணை முறையில் முதலீடு என்பது மிக அவசியமாகின்றது.

நாட்டு கோழி விற்பனை சந்தையும், விற்பனை விலையும் - Nattu Kozhi Pannai


கறிக்கோழியின் விலையைக் காட்டிலும் நாட்டு கோழியானது இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகவே விலைப்போகின்றது. 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது பிராய்லர் கோழி. ஆனால், நாட்டுக்கோழியானது 300லிருந்து 400வரை விற்கப்படுகிறது. தற்போது கறிக்கோழி முட்டையானது 5 ரூபாய்க்கும் நாட்டு கோழி முட்டையானது 15 ரூபாயாகவும் உள்ளது. இந்த நிலையில் மாறுதல்கள் வரலாம். பிராய்லர் கோழிகளுக்கு கடைகள் அமைந்திருப்பதைப் போல் நாட்டு கோழிகளுக்கு என்று பிரத்யேகமான கடைகள் அதிக அளவில் இல்லை. எனவே, பண்ணைகளோடு நின்றுவிடாமல் அதனுடன் நாட்டு கோழி கடைகளை வைத்தாலும் நன்றாக இலாபம் ஈட்டலாம். நாட்டு கோழி பண்ணைகளிலே நேரடியாக கொள்முதல் செய்கின்ற பெரிய கடைகளும் உள்ளன அப்படிப்பட்ட பெரு நிறுவன தொடர்புகள் வளர்ச்சிப் பாதைகளுக்கு வழிவகுக்கும்.

இன்றைய காலக்கட்டங்களில் ஒரு தொழில் அல்லது ஒரு பொருளினை உற்பத்தி செய்தால் அதன் மூலமாக இடைத்தரகர்களுக்கே இலாபம் அதிகம் ஈட்டக்கூடிய வழி இருந்து வருகிறது. எவ்விதமான முதலீடுமின்றி இடைத்தரகர்கள் தங்களுடைய இலாபத்தினை குவிப்பதற்கு பொருளின் உற்பத்திக்காரர்கள் நேரடி தொடர்பின் வாயிலாக நுகர்வோர்க்கு அதனை அளிக்காதது தான். எனவே, நாட்டுக்கோழி பண்ணை அமைத்து கோழிகளை வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நாட்டுகோழிக்கு என தனி இறைச்சி கடைகள், இரவு நேர நாட்டு கோழி கடைகள் அமைப்பதன் வாயிலாக முழு இலாபத்தினை உற்பத்தி செய்தவரே அடைய இயலும்.

நாட்டு கோழி பண்ணையின் பயன்கள் - Nattu Kozhi Pannai


தமிழகத்தின் சிறு மற்றும் பெரு தொழில்களின் பிறப்பிடமே இங்கு காணப்படும் கிராமங்கள் தான். அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களைப் போலவே இப்போது கிராமங்களும் மாற தொடங்கிவிட்டன. விவசாயம், பண்ணை மற்றும் தொழில் இப்படி எதற்குமே கிராமங்கள் உகந்ததில்லை என்ற கருத்து கிராம மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், அது உண்மையில்லை. இன்றும் கோழி இறைச்சி, பால் உற்பத்தி, முட்டை உற்பத்தியில் இந்திய அளவில் கிராமங்களின் உற்பத்தியும் ஏற்றுமதியுமே அதிகமாயிருக்கின்றன. இந்தியாவின் மொத்த வளர்ச்சியில் மென்பொருள் தொழில் நுட்பத்திற்கு எந்த அளவிற்கு இடம் இருக்கிறதோ அதே அளவில் குடிசை, விவசாயம் மற்றும் பண்ணைகளுக்கும் தனி இடம் இருக்கின்றது. இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள்  நகர தொழிற்சாலைகளிலிருந்து அனுப்பப்படுவது மட்டுமில்லை கிராமங்களின் உற்பத்தி பொருட்களும் அதில் அடங்கியிருக்கிறது.


நகர மக்கள் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் மேலைநாட்டு கலாச்சார பாதைகளுக்கு திசைமாறியிருந்தாலும் உணவு கலாச்சார மாற்றங்கள் இந்த நவீன உலகில் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதன் காரணமாகவே, ஆர்க்கானிக் உணவு வகைகளை மக்கள் தேட ஆரம்பித்தனர். இன்று ஆர்கானிக் (Organic Farming Methods) அல்லது இயற்கை முறையில் தயாரித்தது என விளம்பரத்தை கண்டதும் மக்கள் கூட்டம் அலைமோதுவதைக் காணலாம். அவற்றின் விலை அதிகமாக இருந்தும் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்த நிலை வரும் காலங்களில் பெரிய மாற்றம் தருமாயின் கலப்படமற்ற உணவு வகைகள் உற்பத்தி அதிகரிக்க வழிவகுக்கும். இதனால் இயற்கை முறையிலான விவசாய பொருள்களின்  உற்பத்தி பெருக்கம் பலமடங்காக உயரும். 

எதற்காக நாட்டு கோழி வளர்க்க வேண்டும்?


  • மற்ற பிராய்லர் அல்லது வேறு வகை கோழி இனங்களையோ அல்லது கால்நடைகளையோ வளர்க்காமல் எதற்காக? ஏன்? நாட்டுகோழிகளை வளர்க்க வேண்டும்.
  • நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக பெரிய முதலீடு எல்லாம் அவசியமில்லை. குறைந்த முதலீட்டிலே ஆரம்பித்து நல்ல இலாபத்தினை பெறலாம்.
  • நம் நாட்டின் பருவ நிலை மாற்றங்களினால் நாட்டுக் கோழிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை.
  • தீவனச் செலவுகளுக்கும் பெரிய அளவில் செலவழிக்க வேண்டிய கட்டாயம் எல்லாம் இல்லை.
  • திறந்த வெளி வளர்ப்பில் வளரக்கூடிய கோழிகள் புற்கள், கரையான் மற்றும் மண்ணில் கிடைக்ககூடிய சிறு தானியங்களை மட்டுமே வைத்துக் கூட நல்ல எடையைப் பெறுகின்றன.
  • சேவல்களுக்கு 80 நாட்களும் கோழிகளுக்கு 90 அல்லது 100 நாட்களும் முடிந்ததும் விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பிவிடலாம். இலாபத்தினை பெற்றதுமே அடுத்த பிரிவினை பண்ணைக்கு இறக்கிவிடலாம்.


நாட்டு கோழி அதிகம் விரும்பப்படுவதற்கான காரணங்கள்


  • நாட்டுக்கோழியின் இறைச்சியும் சரி முட்டையும் சரி நல்ல புரதச் சத்தைக் கொண்டுள்ளன.
  • புரதச்சத்து குறைபாடுகள் உள்ளபவர்கள் விரும்பி உண்ணும் அசைவ உணவாக நாட்டு கோழி இறைச்சி இருந்து வருகிறது.
  • முட்டைகளில் கொழுப்பு அதிகமாக இருப்பதனால் உடல் ஊட்டத்திற்கு பயன்படுகிறது.
  • சத்து குறைபாடு உள்ளபவர்கள் நாட்டு கோழியை தினசரி உண்பதன் மூலமாக நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • ஹோட்டல்களில் நாட்டு கோழிக்கு என தனி இடத்தை பெற்றிருக்கின்றது.


வண்ணக்கோழிகள் எனும் உயர் ரக நாட்டு கோழி வளர்ப்பு - Country Chicken Farming


உயர் ரக நாட்டு கோழிகள் என்னும் இந்திய மற்றும் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் மூலமாக வெளிநாட்டு இன கோழி வகைகளை நம் நாட்டின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மரபணுக்களை மாற்றி அமைத்து அதனுடைய உற்பத்தி பெருக்கத்திற்காக அரசின் வாயிலாக சில சலுகைகளுடன் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் கோழி வகையாகும். நாட்டு  கோழி பண்ணை இப்போது அதிகரித்து வரும் நிலையில் வண்ணகோழிகளே கால்நடை ஆராய்ச்சி மையத்தின் உதவியால் வளர்க்கப்படுகின்றன. அதனுடைய பயன்களும் அளப்பரியதாகவே இருந்து வருகிறது.

  • உயர் ரக நாட்டு கோழிகள் பல வண்ணங்களில் காணப்படுகின்றன. பார்ப்போர் கண்களை மிளிரவைக்கின்றன.
  • அதிக அளவில் நாட்டு கோழி பண்ணை வளர்ப்பில்  அறிவில்லாதோரும் எளிமையான முறையில் வளர்த்தாலும் நல்ல கோழி எடையை பெறமுடியும்.
  • அடைகாக்கும் தன்மைகளில்லை எனினும் அதிக முட்டைகளிடும் தன்மைகள் கொண்டவை.
  • குறைவான கொழுப்பு சத்தினை நாட்டு கோழிகள் பெற்றிருப்பதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் இயல்பை கொண்டவை.
  • கலப்பின கோழிகளின் சுவை நாட்டுக் கோழிகளின் இறைச்சி மற்றும் முட்டைகளின் சுவையை ஒத்தே இருக்கும்.
  • தரமில்லாத புரதமும்  தானியங்களையும் நார்சத்து வகைகளையே தீவனமாக அளித்தல் போதுமானது.


Country Chicken Farming Ideas In Tamil - நாட்டு கோழி பண்ணை மற்றும் வளர்ப்பு – Nattu Kozhi Pannai பற்றிய அமைப்பு முறையும் வழிமுறையும் பார்த்தோம். இனி அடுத்தடுத்த பதிவுகளில் தீவனச் செலவு, மருத்துவ வழிகாட்டல், விற்பனை முறைகள் பற்றிக் காணலாம். நாட்டு கோழி பண்ணையை அமைக்க நினைத்தீர்களெனில், கால்நடை ஆராய்ச்சி மையத்தின் உதவியை நாடி அறிந்து தெளிந்து மேலும் Tamil Farming போன்று வலைதளத்திலிருந்தும் அறிந்துகொண்டு அதன்பிறகு பண்ணை களத்திற்கு இறங்குங்கள். வீட்டில் சிறிய எண்ணிக்கையிலான கோழிகளை வளர்த்து புரிதல் பெற்ற பின்பு நாட்டு கோழி பண்ணை  தொடங்குதல் சிறந்ததாகும். எதுவாகினும் நல்லறிவோடு துணிந்து தொடங்கினால் வெற்றி நமதாகிவிடும். அடுத்தடுத்த பதிவுகளில் நாட்டு கோழி வகைகள், பராமரிப்பு, தீவன முறை என அனைத்தையும் காணலாம். Farming Methods பற்றி தமிழில் தெரிந்துகொள்ள இந்த பதிவினை பகிர்ந்து உதவவும் மேலும், விளக்கங்களுக்கு கீழே கமென்ட் செய்யவும். உங்களுடைய நாட்டு கோழிகளை விற்பனை செய்வதற்கும் குஞ்சுகளை வாங்குவதற்கும் கீழே கமென்ட் செய்யுங்கள்.

4/Post a Comment/Comments

  1. Country chicken farming in tamilnadu nu oru post pottu enga country chickens and country chicken eggs kedaikum nu poduga

    ReplyDelete
  2. Tamil nadu la engellam kozhi kunju kidaikum nu in that country chicken farming in tamil la engaum write panave illa.. atha pathi sariya velakam koduga...

    ReplyDelete
  3. Engayum Koli kunchu enga kidaikuthu nu mentioned pannala please try to mention it

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post