Fish Farming | Meen Valarpu | மீன் வளர்ப்பு | Meen Pannai

Fish Farming, Meen Valarpu, மீன் வளர்ப்பு, Meen Pannai, Organic Farming Methods
Fish Farming

Fish Farming | Meen Valarpu | மீன் வளர்ப்பு | Meen Pannai: Organic Farming Methods


Fish Farming | Meen Valarpu | மீன் வளர்ப்பு | Meen Pannai | Organic Farming Methods | பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்துதான் இந்தியாவில் மீன் உற்பத்தியானது மக்களிடையே அதீத கவனம் பெற்றது. 2017 இலிருந்து மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்திலும் சீனாவானது முதலிடத்திலும் இருந்து வருகின்றது. 9,45,892 மெட்ரிக் டன்களை வருடத்திற்கு இந்தியா உற்பத்தி செய்து வருகின்றது. இந்தியாவின் மீன்  வளர்ப்பு (Fish Farming - Meen Valarpu) மூலமாக நாட்டின் உணவு தேவை மட்டுமில்லாது ஏற்றுமதியிலும் இந்தியா முன்னிலையில் இருந்து வருகின்றது. கப்பல் மற்றும் விமானங்களின் வாயிலாக அண்டை நாடுகளுக்கு மீனை வாணிகம் செய்துகொள்கிறோம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஐந்து வகையான நீர் வளங்கள் இருக்கின்றது. அவையாவன நன்னீர் மீன்வளம், உவர்நீர் மீன்வளம், கடல் மீன் வளர்ப்பு (Meen Valarpu), வண்ண மீன் வளர்ப்பு (Meen Valarpu) மற்றும் குளிர்நீர் மீன் வளமாகும்.


மீன் இறைச்சியில் காணப்படும் சத்துக்கள் :


இறைச்சிகளில் மீன்கள் தனித்து விரும்பப்படுதலுக்கு அதன் சுவையும் ஊட்டச்சத்துக்களுமே ஆகும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மீனவ பகுதிகளை தவிர்த்து மீன்களை வாரம் மூன்று முறை உணவுக்காக பயன்படுத்தும் குடும்பங்களும் இருக்கின்றன. மீன்களில் 60 சதவிகிதத்திலிருந்து 70 வரையில்  ஈரப்பதமும், 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகித புரதமும், 3இலிருந்து 5சதவிகித கொழுப்புச்சத்தும், 0.6 இலிருந்து 2 சதவிகித தாது உப்புகளும் இருக்கின்றன. பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின், கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்றவை தாதூப்புகளாகும். இவற்றை தவிர்த்தும் மீன்களில் வைட்டமின் ஏ, டி, இ மற்றும் பி போன்ற உயிர்ச்சத்துகளும் உள்ளன. மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான அளவில் புரதச்சத்துக்கள் உணவின் மூலம் பெறுவது அவசியமாகும்.

புரதத் தேவைக்காக தாவர உணவுகளிலிருந்து பெறுகின்ற புரதமானது முழுமையான அளவில் இல்லாமல் குறைபாடு நிறைந்ததாக இருக்கின்றது. இதற்கு காரணம் தாவர புரதங்களில் சில இன்றியமையாத அமினோ அமிலங்கள் மிகக் குறைவான அளவில் இருத்தலே ஆகும். ஆனால் கால்நடைகளிலிருந்து பெறப்படுகின்ற பால், முட்டை, மாமிசம், போன்ற உணவுகளில் உள்ள புரதங்களில் தாவரப்புரதங்களிலுள்ள குறைபாடுகள் காணப்படுவதில்லை. ஆகவே, அன்றாட உணவில் தேவையான அளவில் மாமிசப் புரதங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய புரதச்சத்து தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய இயலும். மாமிசப் புரதங்களில் சிறந்தது மீன்கள்தான். காரணம் பிற மாமிசங்களின் விலைகளை விட மீன்களின் விலை குறைவாகவே உள்ளதால் குறைவான விலையில் தரமான மாமிசப் புரதத்தை அளிக்கும் உணவாக மீன்கள் பார்க்கப்படுகின்றன.

மீன்களில் உள்ள கொழுப்புகளில் நம்முடைய உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும்  எவ்விதமான கேடு விளைவிக்கின்ற பொருட்களுமில்லை. மீன்களானது நமக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத தன்மையும் கொண்டுள்ளதால் சிறந்த ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. கொழுப்புச்சத்தானது சுவையாகவும், உடலுக்கு சக்தியையும் அளிக்கக்கூடிய உணவாக இருப்பினும், ஆடு மற்றும் மாடுகளின் இறைச்சியில் உள்ள கொழுப்புகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு நிறைய உள்ளது. எனவே இவ்வகை இறைச்சிகளை உண்ணும் போது மாரடைப்பு மற்றும் பலவகை இதய நோய்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாகவே, வயோதிகர்கள் பெரும்பாலும் மீன் மாமிசத்தையே எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். மற்ற மாமிச உணவுகளோடு ஒப்பிடும்போது எளிதாக செரிமானமாகும் தன்மையும் கொண்டுள்ளதால் மீன்கள் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சிறந்த ஆரோக்கிய உணவாகும். இந்தியா மட்டுமின்றி உலகளவில் மீன்களுக்கான தேவை எப்பொழுதும் ஏறுமுகத்தில்தான் இருந்துவருகின்றது.


இந்திய நீர்வளங்களின் பிரிவுகள் :

  • நன்னீர் மீன்வளம்
  • உவர்நீர் மீன்வளம்
  • கடற்பகுதி மீன் வளர்ப்பு (Fish Farming, Meen Valarpu)
  • வண்ண மீன் வளர்ப்பு (Fish Farming, Meen Valarpu)
  • குளிர்நீர் மீன் வளம்


நன்னீர் மீன் வளம் (Freshwater-fishing Resource)

இந்தியாவின் நன்னீர் மீன் வளமானது 13.67(மீ.ஹெக்டர்) பரப்பளவாகும். இதில் 2.25 (மீ.ஹெ) குளமும், 8.27மீ. ஏரிகளும் மேலும் 3.15 மீ. நீர் தேக்கங்களாகும். 2000ற்கு முன் நன்னீர் மீன் வளத்தில் மூலம் நம் நாட்டில் அதிகமான மீன் வளர்ப்பு (Fish Farming) இருந்தது.


உவர் நீர் வளம் (Saltwater-fish Resource)

இறால் மீன் வளர்ப்பானது உவர் நீர் வளத்தின் வாயிலாக உற்பத்தியாகின்றது. இந்தியாவின் உவர்நீர் வளமானது 1.23 கோடி (ஹெக்) அளவில் அமைந்திருக்கிறது. அதில் 80 சதவீதம் பரம்பரை கால மீன் பிடிப்பு பகுதிகளாகும். இந்தியாவிலே வணிக ரீதியாக இறால் மீன் வளர்ப்பு (Fish Farming) ஆனது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் அதிகமாக உற்பத்திசெய்யப்படுகிறது.

குளிர் நீர் வளம் (Coldwater-fishing Resource)

குளிர் நீர் வளத்தின் பரப்பளவு 7,000 கி.மீ ஆகும். குளிர் நீர் வளமானது இரண்டு மலை பகுதிகளுக்கு நடுவேயுள்ள இண்டஸ் மற்றும் அதன் உப நதிகள் ஜேலும், சென்னப், பியாஸ், சட்லஜ், பகிரிதி, மற்றும் அலகென்டா ஆகும். மத்திய கடல் மட்டத்திலுள்ள ஏரி, குளம், ஆறு, ஓடம், மற்றும் அணைகள் ஆகிய அனைத்தும் குளிர்நீர் மீன் வளமாகும்.


கடற்பகுதி மீன் வளர்ப்பு – Seaside Fish Farming

கடலில் புயல் எச்சரிக்கை பருவ கால கட்டங்களில் கடல் வாழ் மக்கள் தொழிலுக்காக கடலில் மீன் வளர்ப்பு (Fish Farming - Meen Valarpu) முறை அரசாங்கத்தின் உதவியினால் துவங்கப்பட்டது. கடல் மீன் வளர்ப்பிற்கு (Fish Farming) தேவையான போதிய புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். தேவையான முன்னேற்றங்களை வருகின்ற காலங்களில் எதிர்பார்க்கலாம்.


வண்ண மீன் வளர்ப்பு (Colour-fish Resource)

பொழுது போக்கிற்காக வளர்க்கப்படுதலே வண்ண மீன் வளர்ப்பாகும். மக்களின் பொழுது போக்கு இப்போது உலக அளவில் வியாபாரமாக மாறியுள்ளது. வண்ண மீன் வளர்ப்பு (Fish Farming - Meen Valarpu) நன்னீரில் வளர்க்கப்படுகிறது.



Fish Farming, Meen Valarpu, மீன் வளர்ப்பு, Meen Pannai பற்றிய ஒரு அறிமுகத்தைக் கண்டோம். மேலும் வருகின்ற பதிவினில் மீன் பண்ணை (Meen Pannai) அமைப்பு, மீன் பண்ணை (Meen Pannai) வளர்ப்பு முறை, பராமரிப்பு மற்றும் சந்தை நிலை பற்றிக் காணலாம். Organic Farming Methods பற்றிய முழுமையாக தெரிந்துகொள்ள TamilFarming-யை அணுகுங்கள். இந்த பதிவினை பகிர்ந்து உதவுங்கள் மேலும், விளக்கங்களுக்கு கீழே கமென்ட் செய்யவும்.

Post a Comment

1 Comments

  1. Fish farming la profit evlo varum? Investment evlo podanum?

    ReplyDelete