Poultry Breeds | நாட்டு கோழி இனங்கள் | Nattu Kozhi Vagaigal

Poultry Breeds, நாட்டு கோழி இனங்கள், Nattu Kozhi Vagaigal, Organic Farming Methods
Poultry Breeds

Poultry Breeds | நாட்டு கோழி இனங்கள் | Nattu Kozhi Vagaigal: Organic Farming Methods



Poultry Breeds | நாட்டு கோழி இனங்கள் | Nattu Kozhi Vagaigal | நாட்டு கோழி இனங்கள் என்பது கோழி வளர்ப்பில் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒர் முக்கிய அம்சமாகும். கோழி வகைகளை (Poultry Breeds) அடையாளம் காணுதல் என்பது வளர்ப்பின் விதியுமாகும். நாட்டு கோழி வளர்ப்பில் பல கட்டமைப்புகள் இருக்கின்றன. அதில் முதல்படியாக எந்த முறையில் வளர்ப்பது? என்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அந்த கேள்விக்கு தொழில் முனையும் நம்மிடம் தான் பதிலுள்ளது. நாட்டு கோழி வளர்ப்பு முறையில் முதலீட்டைப் பொறுத்தே இலாபமும் கிடைக்கும். வளர்ப்பு முறைக்கு பின் தேர்வு செய்வது கோழி இனத்தை (Poultry Breeds) ஆகும்.

தமிழகத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழக்கூடிய பல விவசாயிகளும் புதிதாக சிறிய அளவிலான நாட்டு கோழி வளர்ப்பினை தொடர்கின்றனர், அவர்களுக்கென இருக்கின்ற காடுகளில் அக்கோழி அல்லது ஆடுகள் நன்றாக மேய்ந்து கொள்கிறன. அது போக தனியாக தீவனும் சிறு சிறு தானியங்களும் கொடுக்கிறார்கள். பண்ணை வளர்ப்பில் வளர்க்கப்படும் கோழிகளைக் காட்டிலும் சுதந்திர கோழிகளின் ஆரோக்கியமும், எடையும் அதிகமாகவே காணப்படுகிறது. நாட்டு கோழியில் பல வகைகள் இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 8 வகையான கோழிகளே பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன.   நாட்டு கோழி இனங்கள் (Poultry Breeds) பற்றி விரிவாக காண்போம்.

நாட்டு கோழி இனங்கள்: Poultry Breeds, Nattu Kozhi Vagaigal


தமிழக கால்நடை ஆராய்ச்சி மையமானது புது உயிர்க்கோழி இனங்களின் கலப்பின கோழி செயல்பாட்டை இன்றளவும் தொடர்ந்துக்கொண்டே வருகின்றது. அதன் வாயிலாக பல வண்ண கோழி இன ரகங்கள் கிடைத்தாலும், வழமையான ரகங்களில் தமிழ்நாட்டில் 8 வகையான கோழி இனங்களும் (Poultry Breeds) இந்தியாவில் மொத்தம் 18 வகையான கோழி இனங்களும் (Poultry Breeds) உள்ளன. அதில் தமிழக நாட்டு கோழி இனங்கள் பின் வருமாறு – 

  • சண்டைக்கோழி அல்லது அசில் கோழி இனம்
  • கடக்நாத் என்னும் கருங்கால் கோழி இனம்
  • சிறுவெடைக்கோழி இனம்
  • பெருவெடைக்கோழி இனம்
  • குட்டைக்கால் கோழி இனம்
  • குருவுக்கோழி இனம்
  • கொண்டைக்கோழி இனம்
  • மொட்டை கழுத்து கோழி என்னும் கிராப்புக்கோழி
சண்டைக்கோழி அல்லது அசில் கோழி இனம் : நாட்டு கோழி இனங்கள், Poultry Breeds

அசில் கோழி இனமானது இந்திய இனத்தில் வரக்கூடியது. இந்தியாவில் ஆந்திராவை பிறப்பிடமாக கொண்ட இனமாகும். மேலும், இந்த வகை கோழி இனங்கள் பார்ப்பதற்கு திறன்மிக்க, ஆஜாகுபாவான வலுநிறைந்த தோற்றத்தை பெற்றிருக்கின்றன. பார்ப்பதற்கு முகம் சிறியதாக, அலகு சிறியதாகவும், கழுத்து நீண்டும் வால் சிறியதாகவும் தோற்றமளிக்கின்றன. அசில் இனக்கோழிகளை இறைச்சிக்காக வளர்த்தாலும், அதன் தோற்றத்துக்காக கோழி சண்டையில் பயன்படுத்தவே பலரும் விரும்புகிறார்கள். கோழி சண்டை பிரியர்கள் அசிலை சுவைப்பதற்கு பதிலாக சண்டக்காக பயன்படுத்துகிறார்கள்.


3 கிலோவிலிருந்து 4 கிலோ வரையிலான எடையை அசில் இன சேவல்கள் பெறக்கூடியது. கோழிகளோ 2 கிலோவிலிருந்து 3 கிலோ வரை எடையை பெறும். அசில் இன கோழிகள் ஆண்டிற்கு 100 வரையிலான முட்டைகளை இடும் திறன் மிக்கவை. இதன் கருவுறும் திறனானது 60 சதவிகிதமாகவும் குஞ்சு பொறிக்கும் திறன் 65 சதவிகிதமாகவும் இருக்கின்றது. அசில் இன கோழிகள் தூய்மையான கோழி இனம் (Poultry Breeds) எனவும் அழைக்கப்படுகிறது.



கடக்நாத் என்னும் கருங்கால் கோழி இனம் : நாட்டு கோழி இனங்கள், Poultry Breeds

கடக்நாத் கோழி இனமானது கருங்கால் கோழி என்றும் அழைக்கப்படுகிறது. வட மாநில மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் பகுதிகளை பிறப்பிடமாகக் கொண்டுள்ளன. கருப்பு மற்றும் கரு நீல நிறத்தில் காணப்படுகிறது. எடை அதிகமாகவும், சுவையில் ருசிகரமாகவும் தனித்துவம் பெற்றிருந்தாலும் இந்த இனத்தின் நிறத்தைக் கண்டு பெரிய ஈர்ப்பில்லாமலே மக்கள் புறக்கணிக்கின்றனர். குளிர், மழை, வெயில் காலங்களில் தன்னை காத்துக்கொள்ளும் அளவிற்கு உடல் தகவமைப்பை பெற்றுள்ளன இந்த கடக்நாத் கோழி இனம்.

கருங்கால் இனத்தின் கோழியானது 1 கிலோவிலிருந்து 1 ¼ கிலோ வரையிலாக எடை காணப்படும். சேவலின் உடல் எடையானது 1.5 கிலோவிலிருந்து 2 கிலோ வரையிலாக பெறும். ஆண்டிற்கு 105 முட்டைகள் வரையிலாக இடக்கூடிய திறன் பெற்றவை. கருவுறும் திறனும் குஞ்சு பொறிக்கும் திறனும் 50 சதவிகிதமாக தான் இருக்கும்.

சிறுவெடைக்கோழி இனம் : நாட்டு கோழி இனங்கள், Poultry Breeds

சிறுவெடை கோழி இனமானது அதிக அளவில் முட்டை விடும் திறனைக் கொண்டிருக்கும். அதன் காரணத்தினால்,  700கிராமிலிருந்து 1000கிராம் (1 கிலோ) வரையிலான எடையைக் கொண்டிருக்கும் அதுவே சேவலானது 1கிலோவிலிருந்து 1கிலோ மற்றும் 250 கிராம் எடையைக் கொண்டிருக்கும்.  முட்டைத் தொழிலில் முக்கிய பங்கை வகிப்பதும் சிறுவெடை கோழி இனமே தான். நாட்டு கோழி வளர்ப்பில் முட்டையை பிரதானமாகக் கொண்டு தொழில் செய்வதாக இருந்தால் சிறுவெடை கோழி இனத்தையே குறிவைக்க வேண்டும்.


பெருவெடைக்கோழி இனம் : நாட்டு கோழி இனங்கள், Poultry Breeds

பெருவெடைக்கோழி இனமானது வீடுகளில் தமிழகத்தில் பல பகுதிகளில் வளர்க்கப்படும் பிரசித்திப் பெற்ற இனமாகும். இந்த இனத்தின் எடையானது 2 ½ கிலோ கோழியும் 3கிலோவிலிருந்து 4கிலோ வரை சேவலும் காணப்படும். கிளிமூக்கு கோழியும் இதன் வகைக்குள்ளவே வரும். பெருவெடை கோழியானது முட்டையிடும் திறனைக் கொண்டிருந்தாலும் அடைக்காக்கும் பண்பு எவற்றையும் தன்னகத்தே கொண்டுடையது அல்ல. இந்த வகை கோழிகள் 50 இலிருந்து 60 வரை முட்டைகளே ஆண்டிற்கு இடுகின்றன. மேலும், கொண்டைபூவினை தலையில் பெற்றிருக்கும். இறைச்சிக்காகவே பெருவெடை கோழிகள் பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன. விற்பனையில் பெருவெடை கோழி இனமானது நல்ல மார்க்கெட்டைக் கொண்டிருக்கிறது.

குட்டைக்கால் கோழி இனம் : நாட்டு கோழி இனங்கள், Poultry Breeds

குட்டைக்கால் கோழி இனமானது அரிதான இனமாகும்.  இதனுடைய வால் பகுதி தரையை தொடும் அளவிற்கு குட்டையான கால்களை கொண்டது.


குருவுக்கோழி இனம் : நாட்டு கோழி இனங்கள், Poultry Breeds

குருவுக்கோழி இனமானது நாட்டு கோழி இனத்தில் மிகவும் சிறியதாக காணப்படும் இனமாகும். இந்த வகை கோழிகளின் முட்டையிடும் திறனானது அதிசயமானது தான். நீண்ட நேரமாக அடையில் உட்காராமலேயே அதிக முட்டை பொறிக்கும் திறன் கொண்ட கோழியினம். ஒரு முறையில் 15 முட்டைகள் வரையிலாக முட்டை பொறிக்கும் தன்மை கொண்டவை. தமிழக வடக்கு பகுதிகளில் குருவுக்கோழி இனத்தை அடையாளம் காணலாம்.

கொண்டைக்கோழி இனம்: நாட்டு கோழி இனங்கள், Poultry Breeds

கொண்டைக்கோழி இனமானது மிகவும் அரிதாகக் காணப்படும் கோழி இனங்களில் ஒன்று. தலைகளில் கொண்டை போன்ற அமைப்பை கொண்டவை ஆகும். இந்த இனக் கோழிகளை பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

மொட்டை கழுத்து கோழி என்னும் கிராப்புக்கோழி : நாட்டு கோழி இனங்கள், Poultry Breeds

மொட்டை கழுத்து கோழி இனத்தின் கழுத்துப் பகுதியில் இறகுகள் இல்லாமல் மொட்டையாக காணப்படுவதால் இவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன. கேரளாவை பிறப்பிடமாகக் கொண்டுள்ளன இந்த மொட்டை கழுத்து கோழிகள். இவை நீளமான உருண்டை வடிவ கழுத்தினைக் கொண்டிருக்கும். 70 சதவிகித கருவுரும் தன்மைக் கொண்டவை.

கலப்பின கோழிகள் ஓர் பார்வை : நாட்டு கோழி இனங்கள், Poultry Breeds

கலப்பினம் என்னும் வண்ணக் கோழி இனமானது நாட்டு கோழிகளை விட விரைவாக எடையை பெறக்கூடியது.  வண்ண கோழிகளின் சுவையோ நாட்டு கோழிகளுக்கும் பிராய்லர் என்னும் கறிக்கோழிகளுக்கும் இடைப்பட்ட சுவையைக் கொண்டிருக்கும். நாட்டு கோழி அளவிற்கு இல்லையெனினும் கலப்பின கோழியானது அனைத்து விதமான தட்பவெட்ப நிலைகளிலும் அனுசரித்து வாழக்கூடியது. முட்டைகளின் நிறமானது நாட்டு கோழியின் முட்டை நிறத்தினை ஒத்தேக் காணப்படுகிறது பழுப்பு நிறத்தில். நாட்டுக்கோழி என்றே விற்பனைக்கும் அனுப்பலாம் அதன் விலையையும் பெறலாம்.

நாட்டு கோழி இனங்கள் | Poultry Breeds | Nattu Kozhi Vagaigal பற்றி பார்த்தோம். மேலும் எந்த விதமாக நாம்  தொழில் செய்யப் போகிறோமோ அதற்கேற்றார் போல் கோழி வகைகளை தெரிவு செய்தல் அவசியமாகும். கால்நடை ஆராய்ச்சி மையத்தில் அனைத்து விதமான கலப்பின கோழிகளின் விளக்கங்களும் கிடைக்கும். கலப்பின கோழிகளுக்கு உங்களின் ஊரில் இருக்கும் வேளாண் அல்லது கால்நடை ஆராய்ச்சி மையத்தை அணுகுங்கள். வருகின்ற பதிவுகளில் நாட்டு கோழி பராமரிப்பு பற்றிக் காணலாம். Organic FarmingMethods பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவினை பகிர்ந்து உதவவும் மேலும், விளக்கங்களுக்கு கீழே கமென்ட் செய்யவும்.

Post a Comment

2 Comments

  1. Anaithu vagaiyana Nattu kozhi inangal patriyum thelivaga potrukeenga.....Nanri ...

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி.கோழி குஞ்சுகள் கிடைக்கும் விலாசங்கைள கொடுத்தால் நல்லது.

    ReplyDelete