Quail Farming | காடை வளர்ப்பு பண்ணை | Kadai Valarpu Pannai

Quail Farming, காடை வளர்ப்பு பண்ணை, Kadai Valarpu Pannai
Quail Farming

Quail Farming | காடை வளர்ப்பு பண்ணை | Kadai Valarpu Pannai: Organic Farming Methods


Quail Farming | காடை வளர்ப்பு பண்ணை | Kadai Valarpu Pannai | குறைந்த முதலீட்டில் நிறைவான இலாபம் பெறுவதற்காக காடை வளர்ப்பை பலரும் தேர்ந்த்தெடுக்கின்றனர். காடை வளர்ப்பு பண்ணையானது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது. அதிலும் ஜப்பானிய காடை வளர்ப்பிற்கு தனி மவுசு இருந்து வருகிறது. குறைந்த இடத்தில் அதிக காடைகள் வளர்த்தலே (Quail Farming) இதன் காரணமாகும். பலரும் காடைகளை இறைச்சிக்காகவே வளர்க்கின்றனர். காடை வளர்ப்பு பண்ணைகள் (Quail Farming) திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் தமிழகத்தில் அதிகமாக நடத்தப்பட்டு வருகின்றன.


காடை வளர்ப்பின் - Quail Farming பலன்கள்



காடை வளர்ப்பு பண்ணை (Quail Farming) பொறுத்தவரையில் குறைவான முதலீடே போதுமானதாகும். குறுகிய காலங்களில் பணமாக்கல் காடை வளர்ப்பில் - Quail Farming சாத்தியமாகும். 5லிருந்து 6 வாரங்களிலே காடைகளை விற்பனை சந்தைக்கு அனுப்பலாம். காடைகளை மிகக் குறைந்த இடத்திலே அதிக எண்ணிக்கையிலான அளவில் வளர்க்கலாம். மேலும், மிகக் குறைந்த அளவிலான தீவனமே காடைகளுக்கு போதியதாகும். காடையின் முட்டையானது சத்துள்ளதாக காணப்படுகிறது. காடையில் அதிக அளவிலான புரதம் 22 சதவீதமும் கொழுப்பானது குறைந்த அளவில் 5 சதவீதமாகவும் காணப்படும் காரணத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் சாப்பிடும் வண்ணம் இயற்கையிலே அமைந்துள்ளது. 

Read This - காடை இனங்கள் - ஜப்பானிய காடை வளர்ப்பு

காடை பண்ணை - Quail Farming - கொட்டகை அமைப்பு:


கொட்டகை அமைப்பானது இருவேறு முறையாக பிரிக்கப்பட்டுள்ளது. 1.ஆழ்கூளமுறை 2.கூண்டு முறை

ஆழ்கூள முறை கொட்டகை அமைப்பு - Kadai Valarpu Pannai

  • இந்த முறை கொட்டகை அமைப்பானது காடைகளை முதல் இரண்டு வாரங்களுக்கு ஆழ்கூளத்தில் வளர்த்தலாகும்.
  • ஆழ்கூள முறையில் ஒரு சதுர அடிக்கு 6 காடைகள் வரை வளர்க்க இயலும். ஆழ்கூளத்திற்கு உமி, தேங்காய் நார் அல்லது மரத்தூள் பயன்படுத்தலாம்.
  • இரண்டு வாரங்களுக்கு மேல் கூண்டு வளர்ப்பிற்கு மாற்றிவிட்டால் அலைதலினால் உடல் எடை குறைதல் என்பது இராது.

கூண்டு முறை கொட்டகை அமைப்பு - Kadai Valarpu Pannai

முதல் இரண்டு வாரங்களுக்கு ஒரு 100 காடை எனில் 3x2 ½x1 ½ அடி-என்ற அளவில் கூண்டானது அமைக்கப்பட வேண்டும். அதன் பிறகான மீதமுள்ள நான்கு வாரங்களுக்கு 4x2 ½x1 ½ அடி என்ற அளவில் கூண்டின் அளவு அமைக்கப்பட வேண்டும். கூண்டினுடைய கம்பிவலையானது அடிப்பகுதிக்கும் பக்கவாட்டிற்கும் 1.5 செ.மீ. அளவிலாக அமைக்க வேண்டும். கழிவுகளை தினமும் நீக்குவதற்கு என தனியாக ஒர் தகடினை கூண்டிற்கு கீழே பொருத்தினால் எளிமையாக இருக்கும். 4 லிருந்து 5 அடுக்குகளாக கூண்டுகளை அமைக்கலாம். 


காடை வளர்ப்பு பண்ணை - Quail Farming- தீவனத்தை தயாரிக்கும் முறை:

காடை வளர்ப்பு
காடை குஞ்சு
வளர் காடை
Quail Farming 
0-2 வாரங்களுக்கு
4-6 வாரங்களுக்கு
வெள்ளைச் சோளம்
15
14
மக்காச்சோளம்
27
31
எண்ணெய் நீக்கிய அரிசி தவிடு
8
8
கடலை பிண்ணாக்கு
17
17
சூரிய காந்தி புண்ணாக்கு
12.5
12.5
சோயா மொச்சை தூள்
8
-
மீன் தூள்
10
10
தாது உப்புகள்
2.5
2.5
கிளிஞ்சல் தூள்
-
5

ஒரு காடையானது ஐந்து வார வயது வரையில் 500 கிராம் அளவிலான தீவனத்தை எடுத்துக்கொள்ளும். மேலும், காடையின் தீவனமானது மிகவும் சிறிய துகள்களாக இருத்தல் அவசியமாகும். வளர்ந்த ஆறு வார வயதிற்கு மேற்பட்ட காடைகள் ஒரு நாளைக்கு 30 முதல் 35 கிராம் வரையிலான தீவனத்தை காடையின் முட்டை உற்பத்திக்கு ஏற்றவாறு அளித்தல் அவசியம். காடை தீவன முறைப்படி தயாரிக்க முடியாத காலகட்டங்களில் பிராய்லர் கோழியினுடைய ஆரம்பகால தீவனத்தை 75 கிலோவும் அதனோடு 5 கிலோ பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்க வேண்டும். தீவத்தின் அளவானது பெரிதாக இல்லாதவாறு நன்கு தூளாக அரைத்து பின் காடைகளுக்கு கொடுக்க வேண்டும்.

காடை வளர்ப்பு பண்ணை - காடை குஞ்சு - Quail Farming - வளர்ப்பு முறை:

வளர்ந்த பிறகான காடைகளின் எடையானது முறையே ஆண்காடை 125 முதல் 150 கிராமும் பெண் காடைகள் 175 கிராம் முதல் 200 கிராம் வரையாக இருக்கும். காடைகளின் 7 வது வார வயதில் முட்டையிட ஆரம்பம் செய்யும். பொதுவாகவே மாலை நேரத்தில் தான் முட்டையிடுகின்றன. மேலும், இவை தனது 22 வார வயது வரை முட்டையிடும். காடையின் முட்டை எடையானது 9 கிராம் வரை இருக்கும். பெண்காடைகளின் மார்பு விரிந்ததும் கறுப்பு சாம்பல் மற்றும் பழுப்பு நிற புள்ளிகள் மார்பு, கழுத்து மற்றும் முகம் பகுதிகளில் காணப்படும். இப்படியாக காடைகளின் இனத்தை அடையாளங் காண நான்கு வார வயதினை காடைகள் அடைந்திருக்க வேண்டும். முட்டையிடுவதற்காக வளர்க்கப்படும் காடைகளானது 16 மணி நேர வெளிச்சத்தில் இருக்க வேண்டிய அவசியம் ஆகும். மேலும், நான்கு வார வயதிலே ஆண்காடைகளை பெண் காடைகளிடமிருந்து பிரித்து வைக்க வேண்டும்.


காடை வளர்ப்பு பண்ணை - காடை குஞ்சு வளர்ப்பு - Quail Farming - பராமரிப்பு முறை: Kadai Valarpu Pannai

  • காடை குஞ்சுகளுக்கு வெளிச்சமும் அதன் மூலமாக கிடைக்கும் வெப்பமும் மிகவும் அவசியமாகும். கோழிக்குஞ்சுகளை காட்டிலும் காடைகளுக்கு அதிக வெப்பமும் வெளிச்சமும் தேவைப்படுகிறது.
  • வெளிச்சத்தினால் கிடைக்கும் வெப்பம் போதிய அளவில் கிடைக்காத காரணத்தில் தான் குஞ்சு பருவத்தினில் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது.
  • சில காடை வளர்ப்பு பண்ணைகள் பேட்டரியின் மூலமாக மின்சார தடை ஏற்பட்டாலும் தங்கு தடையில்லாது வெளிச்சம் கிடைக்குமாறு அமைத்திருக்கிறார்கள். இது போல் அமைத்தல் சிறந்ததாகும்.
  • 8 கிராம் முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாக மிக சிறிய அளவில் காடை குஞ்சுகள் பொரிக்கப்பட்டதும் இருக்கும்.


காடை வளர்ப்பு பண்ணை - காடை முட்டை வளர்ப்பு - Quail Farming - பராமரிப்பு முறை: Kadai Valarpu Pannai

காடை முட்டையின் எடை 9 கிராம் ஆக இருக்கும். பொதுவாகவே, காடைகள் 7 வார வயதில் இருந்து முட்டையிடுவதற்கு ஆரம்பித்து, 8 வார வயதில் 50 விழுக்காடு முட்டை உற்பத்தி நிலையை பெறும். பெண்காடைகளை ஆண் காடைகளுடன் 8 லிருந்து 10 வார வயதினில் சேர்த்தால் கருவுட்ட முட்டை பெறலாம். ஒரு ஆண் காடைக்கு ஐந்து பெண் காடை என்ற விகிதத்தில் சேர்த்தல் வேண்டும். 18 வது அடை வைத்த நாளில் காடை குஞ்சு வெளியே வரும். 1000 பெண் காடைகளை வைத்து 3000 வரையிலான காடை குஞ்சுகளை உற்பத்தி செய்ய இயலும்.பொரிப்பகத்தை தொழில்நுட்ப உதவியோடு அணுகுதலால் அதிக முட்டை உற்பத்தியை பெறலாம்.


காடை வளர்ப்பு பண்ணை - காடைகளுக்கு வருகின்ற நோய்களும் தடுப்பு முறையும்: Kadai Valarpu Pannai

  • வாத நோய் எனப்படும் மேரெக்ஸ்
  • கழிச்சல் – இராணிக்கெட்
  • இரத்த கழிச்சல் எனும் காக்சிடியோசிஸ்
  • ஈகோலி நோய்
  • தொப்புள் அழற்சி
  • காடைக்கழிச்சல்
  • நுரையீரல் அழற்சி

இது போன்ற நோய்கள் காடைகளுக்கு (Quail Farming) நுண்ணுயிரிகளாலும், வைரஸ் மற்றும் நச்சு கிருமிகளாலும் ஏற்படுகின்றது. இனப்பெருக்கம் செய்வதற்காக ஒதுக்கியுள்ள காடைகளுக்கு சரிவிகித அளவில் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கின்றதா என கண்கானிக்க வேண்டும். அப்போது தான் முட்டையிடுகின்ற காலங்களில் காடைகளின் சத்து குறைபாட்டினால் ஏற்படும் கால் வலுவிலத்தல் மற்றும் வற்றிய உடல் தோற்றத்தை ஏற்படாமல் தவிர்க்கலாம். எவ்விதமான தடுப்பூசிகளும் காடைகளுக்கு தேவைப்படுவதில்லை. இதன் காரணம் அவைகளுக்கு இயற்கையிலே காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தியின் மிகுதியாகும். காடை வளர்ப்பு பண்ணையை (Quail Farming) முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்திகரித்தல், கட்டுபாடான பராமரிப்பு, நல்ல குடிநீர்  மற்றும் சரிவிகித உணவு கொடுத்து வந்தாலே காடைகளின் இறப்பு விகிதத்தினை குறைத்து காடை வளர்ப்பு பண்ணையை (Quail Farming) சிறப்பாக நடத்தி நிறைவான இலாபம் பெறலாம்.


காடை வளர்ப்பு பண்ணை -காடை இறைச்சி எடை விகிதம்:

உறிக்கப்பட்ட காடையின் இறைச்சியானது உயிருள்ள 140 கிராமுடைய காடை இறைச்சியிலிருந்து 100 கிராமாக கிடைக்கும். அதாவது  உயிருடன் இருக்கும் காடையின் 70 சதவிகிதத்தில் காடை இறைச்சியானது உறித்ததும் கிட்டும்.


காடை வளர்ப்பு பண்ணை - Quail Farming - இடையூறுகள்: Kadai Valarpu Pannai

காடைகளின் கழிவுகள் துர்நாற்றம் வீசக்கூடியதாகும். எனவே, தினசரி சரிவர சுத்தம் செய்து வருவது அவசியமாகும். மிகவும் சத்தமாக கூவும் ஆண் காடைகள் எரிச்சலை வரவைக்ககூடும். எனவே கூடுமான வரையில் காடை வளர்ப்பு பண்ணை தனியே ஊரிலிருந்து ஒதுங்கி இருக்குமாறு அமைத்தல் சிறப்பு. பெண் காடைகளுடன் ஆண் காடைகளை ஒன்றாக வளர்த்தால், ஆண் காடைகள் பெண் காடைகளின் கண்களை கொத்தி குருடாக்கிவிடும்.

Quail Farming, காடை வளர்ப்பு பண்ணை, Kadai Valarpu Pannai பற்றிய இந்த பதிவில் காடை வளர்ப்பின் பயன்கள், அம்சங்கள், கொட்டகை அமைப்பு முறை ஆகியவற்றை பார்த்தோம். அடுத்த பதிவினில் ஜப்பானிய காடை வளர்ப்பு பண்ணை முறையை பற்றிக் காணலாம். Organic Farming Methods பற்றி தெரிந்துகொள்ள TamilFarming-யை தொடரவும். இந்த பதிவினை பகிர்ந்து உதவுங்கள் மேலும், விளக்கங்களுக்கு கீழே கமென்ட் செய்யவும்.
  


Post a Comment

4 Comments

  1. Address contact number please give me sir

    ReplyDelete
  2. Sir please sent ur contact number & adress

    ReplyDelete
  3. I admire this article for the well-researched content and excellent wording. we provide hydroponics course singapore at affordable prices. for more info visit our website.

    ReplyDelete