காவிரி நதிநீர்‌ பிரச்சனை | Cauvery Issue

Cauvery Issue | காவிரி நதிநீர்‌ பிரச்சனை | “வான்‌ பொய்ப்பினும்‌ கான்‌ பொய்யா மலைத்‌ தலைய கடற்காவிர்‌'' என்று பட்டினப்பாலை பாடிப்‌ பெருமிதம்‌ கொண்ட அந்த காவிரி! இன்று வறண்டு போய்விட்டது. கர்நாடகத்தில்‌ உள்ள கூர்க மலையிலிருந்து தொடங்கி 600 கி.மீ. தூரம்‌ பாய்ந்து வங்காள விரிகுடா கடவில்‌ காவிரி கலக்கிறது. இதில்‌ 3.20 கி.மீ. கர்நாடகத்திலும்‌ 416 கி.மீ. தூரம்‌ கமிழ்நாட்டிலும்‌ உள்ளது. குர்மபுரி மாவட்டம்‌ ஒக்கேனக்கல்‌ பகுதியில்‌ காவிரி தமிழ்‌நாட்டிற்குள்‌ அடியெடுத்து வைக்கிறது.

Cauvery Issue - காவிரி பிரச்சனை

காவிரியின்‌ மேல்‌ பகுதிக்கு தென்மேற்கு பருவக்‌ காற்றால் மழை கிடைக்கிறது. காவிரியின்‌ கீழ்ப்‌ பகுதியான தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றுக்கு வடகிழக்குப்‌ பருவ மழையால்‌ அதிக அளவு நீர்‌ கிடைக்கிறது. கமிழகப்‌ பகுதி!

cauvery Issue, kaveri issue, காவிரி நதிநீர்‌ பிரச்சனை, காவிரி பிரச்சனை @tamilfarming
காவிரி நதிநீர்‌ பிரச்சனை | Cauvery Issue

சமவெளியாகவும்‌, தாழ்‌நிலமாகவும்‌ இருப்பதால்‌ வெள்ளம்‌ வரும்‌ போது பயன்படுத்த முடியாமல்‌ போகிறது. உலகில முதன் முதலாகக கட்டப்பட்ட அணை கல்லணை.

இது திருச்சியிலிருந்து 176 கி.மீ தொலைவில்‌ சோழ மன்னன்‌ கரிகாலனால்‌ கட்டப்பட்டது. காவிரி நதியும்‌ பழமையானது. அதன் பாசனமும்‌ பழமையானது என்பதற்கு கல்லணை ஒரு சான்றாகும்‌.

காவிரி நீரை தமிழகத்திற்கு வரவிடாமல்‌ தடுத்த சம்பவம்‌ 9௦௦ ஆண்டுகளுக்கு முன்பே நடைபெறறுள்ளது. மைசூர் மன்னன்‌ முதலாம்‌ நரசிம்மன்‌ மைசூருக்கு அருகில்‌ செயற்கை மலைகளை உண்டாக்கி காவிரியின்‌ போக்கையே தடுத்துவிட்டான்‌. இரண்டாம்‌ இராஜராஜ சோழன்‌ படையெடுத்துச சென்று அவறறை உடைத்து காவிரியை மீட்டெடுத்தான்‌.

மைசூர்‌ மன்னன்‌ சிக்க தேவராயன்‌ 17ஆம்‌ நூற்றாணடில காவிரியின்‌ குறுக்கே அணை கட்டி நீரை தடுத்தான்‌. வெகுண்‌டெழுந்த மதுரை ராணி மங்கம்மாள்‌ திரட்டிய படையும, தஞ்சையை ஆண்ட மராட்டிய படையும்‌ அந்த அணையை உடைக்க புறப்பட்டுச்‌ சென்றன மைசூரை நோக்கி. அதற்குள்‌ தானாகவே வெள்ளம்‌ வந்து அணை உடைந்துவிட்டது!

காவிரியைப்‌ பயன்படுத்த 1870ஆம்‌ ஆண்டு பிரிட்டிஷ்‌ அரசிடம்‌ மைசூர்‌ சமஸ்தானம்‌ அனுமதி கேட்டது. பிரிட்டிஷ்‌ அரசு அனுமதி தரவில்லை. 1889ஆம்‌ ஆண்டு காவிரியில்‌ அணை கட்ட வேண்டுமென்று அனுமதி கேட்டது. சென்னை மாகாணத்தின்‌ பாசனத்தை பாதிக்கும்‌ என்று கூறி அணை கட்ட அனுமதி மறுத்தது பிரிட்டிஷ்‌ அரசு.

இதனால்‌ உருவான சச்சரவை முடிவுக்குக்‌ கொண்டு வர 1892 ஆம்‌ ஆண்டு முகன்முதலாக ஓர்‌ ஒப்பந்தம்‌ கொண்டு வரப்பட்டது. சென்னை மாகாணத்தின்‌ அனுமதி பெற்றுதான்‌ அணை கட்ட வேண்டும்‌ என்று ஒப்பந்தததில்‌ தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால்‌ ஒப்பந்தத்தை மீறி 1892இல்‌ ஒரு மிகப்‌ பெரிய அணையை மைசூர்‌ அரசு கட்டியது.

காவிரி தகராறு தொடர்ந்தது. 32 ஆண்டுகளுக்குப்‌ பிறகு 1924இல்‌ மீண்டும்‌ ஓர்‌ ஒப்பந்தம்‌ கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி கிருஷ்ணராஜ சாகர்‌ அணையையும்‌ கண்ணம்பாடி அணையையும்‌ மைசூர் அரசு கட்டியது. மேட்டூர்‌ மற்றும்‌ பவானி அணைகளையும்‌, கல்லணை கால்வாயையும்‌ சென்னை அரசு கட்டியது. இதன்‌ மூலம்‌ தமிழகத்தில்‌ பாசனப்‌ பகுதி அதிகமானதைக்‌ கண்டு மைசூர்‌ அரசு எதிர்ப்பு தெரிவித்தது!

1956-க்குப்‌ பிறகு மொழிவாரி மாநிலங்கள்‌ உருவானபோது கேரளா, ஆந்திரா, மைசூர்‌ உள்ளிட்ட சென்னை மாகாணமும்‌ பிரிக்கப்பட்டது. அதன்படி மைசூர்‌ மாநிலமும்‌, சென்னை மாநிலமும்‌ கேரளா, ஆந்திராவும்‌ தனித்தனியே உருவாயின.

மைசூர்‌ மாநிலம்‌ உருவானதும்‌ அது கபினி, ஹேமாவதி, சுவாணவகதி ஆகிய மூன்று கிளை நதிகளில்‌ அணைகள்‌ கட்ட திட்டமிட்டது. ஒப்பந்தபடி நடக்க மைசூர்‌ மறுத்தது. திட்டமிட்டபடி பல அணைகளையும்‌ கட்டிக்‌ கொண்டது.

நடுவர்‌ மன்றம் காவேரிக்காக

1970இல்‌ நடுவர்‌ மன்றம்‌ அமைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியது. 1971இல்‌ உச்சநீதிமன்றக்தில்‌ வழக்கு தொடுத்தது. பிரதமர்‌ இந்திராகாந்தியின்‌ வாக்குறுதியை ஏற்று வழக்கை தமிழக அரசு திரும்பப்‌ பெற்றது.

காவிரி நதி நீரைப்‌ பயன்படுத்துவதில்‌ உள்ள சிக்கல்களைக்‌ களைய உண்மையறியும்‌ குழு அமைக்கப்பட்டது. இதில்‌ மைசூர்‌, தமிழ்நாடு, கேரள அரசு அதிகாரிகள்‌ இருந்தனர்‌.

1924ஆம்‌ ஆண்டு ஒப்பந்தம்‌ காலாவதி ஆகிவிட்டது என்று மைசூர்‌ அரசு தன்னிச்சையாக 1974ஆம்‌ ஆண்டு அறிவித்தது. இந்த ஆண்டு தான்‌ மைசூர்‌ மாநிலத்தின்‌ பெயர்‌ கர்நாடக மாநிலம்‌ என்று ஆனது. இதன்பிறகு காவிரி தகராறு இன்னும்‌ தீவிர மடையத்‌ தொடங்கியது.

1976ஆம்‌ ஆண்டு நடந்த பேச்சு வார்தையில்‌ காவிரியின்‌ மொத்த நீரளவான 5671 டி.எம்‌.சி. நீரளவில்‌ 489 டி.எம்‌.சி. நீரைத்‌ தமிழ்நாடும்‌, 177 டி.எம்‌.சி.யை கர்நாடகாவும்‌, 5 டி.எம்‌.சி.யை கேரளாவும்‌ பயன்படுத்துவது என உடன்பாடு காணப்பட்டது.

1977இல்‌ தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை முன்‌ வைத்தது. கர்நாடகா அதனை ஏற்கவில்லை. 1990இல்‌ கர்நாடகம்‌ 10 அம்ச திட்டத்தை முன்‌ வைத்தது. தமிழகம்‌ அதை ஏற்கவில்லை.

1926ஆம்‌ ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையும்‌ தோல்வியடைந்ததால்‌ நடுவர்‌ மன்றத்‌ தீர்ப்புக்கு காவிரி நீர்‌ பிரச்சனையை விடும்படி தமிழக அரசு மத்திய அரசிடம்‌ கேட்டுக்‌ கொண்டது. மத்திய அரசு பேச்சு வார்த்தை மூலம்‌ சமசசம்‌ செய்ய மேற்கொண்ட முயற்சிகள்‌ தோல்வி அடைந்தன. பிரச்சனை உச்சநீதி மன்றத்துக்கு வந்தது. உச்சநீதிமன்றத்‌ தீர்ப்பின்படி மத்திய அரசு 02-06- 1990 அன்று நடுவர்‌ மன்றம்‌ அமைத்தது.

நடுவர்‌ மன்றம்‌ வநதும்‌ பிரச்சனை தீரவில்லை. 1892, 1924ஆம்‌ ஆண்டு ஒப்பந்தங்களின்‌ படிதான்‌ காவிரி நதிநீர்‌ சிக்கலைக்‌ தீர்க்க வேண்டுமென்று கூறியது தமிழக அரசு. அந்த ஒப்பந்தங்களை மதிக்க முடியாது என்றது கர்நாடக அரசு. அது மட்டுமல்ல, காவிரியின்‌ மொத்த நீர்‌ அளவில 4565 டி.எம்‌.சி. நீரைத்‌ தனக்களிக்க வேண்டுமென்றது கர்நாடக அரசு. கேரளாவும்‌ தன்‌ பங்கிற்கு 99.24 டி.எம்‌.சி. தண்ணீர்‌ வேண்டுமென்று கேட்டது. தமிழக அரசு உச்சநீதி மன்றத்‌ தீர்ப்பின்படி நடுவர்‌ மன்றம்‌ இடைக்கால உத்தரவு ஒன்றை 25-06-1991இல்‌ பிறப்பித்தது.

இந்த உத்தரவின்படி கர்நாடகா, மேட்டூர்‌ அசைரக்கு வந்து சேரும்படியாக காவிரியில்‌ ஓராண்டுக்கு 205 டி.எம்‌.சி. நீரைத்‌ தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும்‌. அதே போல்‌ கர்நாடக அரசு 11.2 இலட்சம்‌ ஏக்கருக்கு மேல்‌ தனது பாசன பரப்பை அதிகரிக்கக்‌ கூடாது என்றும்‌ நடுவர்‌ மன்றம்‌ உத்தரவிட்டது.

நடுவர்மன்ற ஆணையை அரசிதழில்‌ வெளியிடாமல்‌ தடுக்க பல முயற்சிகளைக்‌ கர்நாடகம்‌ மேற்கொண்டது. ஆயினும்‌ அரசிதழில்‌ 11-12-1991இல்‌ இந்த இடைக்கால தீர்ப்பை மத்திய அரசு வெளியிட்டது.

இதைத்‌ தொடர்ந்து கர்தாடகாவில்‌ தமிழர்கள்‌ தாக்கப்‌பட்டனர்‌. ஏராளமான கர்நாடக தமிழர்கள்‌ கொல்லப்பட்டனர்‌. எண்ணற்றோர்‌ அகதிகள்‌ போல்‌ தமிழகம்‌ வந்தனர்‌. நடுவர்‌ மன்றத்‌ தீர்ப்பின்படி 205 டி.எம்‌.சி. நீர்‌ கிடைக்கும்‌ என தமிழக விவசாயிகள்‌ பெரிதும்‌ எதிர்பார்த்தனர்‌. அதுவும்‌ எந்தெந்த மாதங்களில்‌ எவ்வளவு நீர்‌ மேட்டூருக்கு வந்து சேர வேண்டுமென்று தெளிவாகவே நடுவர்‌ மன்றம்‌ கூறியிருந்தது.

இதனால்‌ குறுவை சாகுபடிக்கு இனி கவலை இல்லை என்று விவசாயிகள்‌ கருதினர். ஆயினும்‌ ஒவ்வோர்‌ ஆண்டும்‌ கடும்‌ போராட்டங்கள்‌, கர்நாடகா மீது அரசியல்‌ நிர்ப்பந்தம்‌ போன்றவற்றின்‌ மூலம்‌ நீரைப்‌ பெற வேண்டியிருந்தது. கர்நாடகா தனது பல்வேறு அணைகளில்‌ முழு அளவில நீரைத்‌ தேக்கி வைத்துவிட்டு மிச்சமிருந்தால்‌ தான தமிழகத்துக்கு தருவது என்று உறுதியாக இருக்கிறது.

இதனால்‌ தமிழகத்தின்‌ 'நெற்களஞ்சியத்தின்' முகவரியிழக்கச்‌ செய்துவிடவே காநாடகம்‌ எண்ணுகிறது. சொட்டுநீர்‌ கூட தமிழகத்துக்குக்‌ தர கூடாது என்று தமிழக எதிர்ப்புணர்ச்சி கர்நாடகாவில்‌ 'கொம்பு சீவி' விடப்பட்டுள்ளது. தமிழகம்‌ தனக்குரிய நீரின்‌ அளவைக கோரும்‌ போதெல்லாம்‌ கன்னடத்‌ தமிழர்களுக்கு எதிரான கலவரக்தில்‌ ஈடுபடுவது கர்நாடக மக்களின்‌ பண்பற்ற செயலாக இருந்து வருகிறது.

கர்நாடக அரசியல்வாதிகள்‌ மறறும்‌ கன்னட நடிகர்‌ ராஜ்குமார்‌, வட்டல்‌ நாகராஜ்‌ போன்றோர்‌ கடந்த 30 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு எதிரான வெறியுணா்ச்சியைத தூண்டி விடுகிறார்கள்‌.

1924ஆம்‌ ஆண்டு ஒப்பந்தம்‌ போடப்பட்டபோது தமிழகத்துக்கு 575.6 டி.எம்‌.சி. நீர்‌ பெற வேண்டும்‌ என குறிப்பிடப்‌பட்டது. இந்த ஒப்பந்தம்‌ எகிப்தில்‌ பாயும்‌ நைல்‌ நதி ஒப்பந்தக்கை முன்னுதாரணமாக கொண்டு அதே பாணியில்‌ உருவாக்கப்‌ பட்டது. அன்று முதல்‌ 1976 வரை சராசரியாக 429 டி.எம்‌.சி கண்ணீர்‌ தமிழகத்துக்குக்‌ கிடைத்து வந்தது.

1976 நெருக்கடி காலத்தில்‌ அது 389 டி.எம்‌.சி.யாக குறைக்கப்பட்டது. 1920-இல்‌ கர்நாடக அரசுதான்‌ முன்‌ வைத்தத்‌ திட்டப்படி 375 டி.எம்‌.சி நீரைத்தான்‌ தர முடியும்‌ என்றது. இதனைத் தமிழகம்‌, கேரளம்‌, புதுவை பகிர்ந்து கொள்ள வேண்டும்‌ என்றது.

177 டி.எம்‌.சி. நீரைப்‌ பயன்படுத்தி வந்த கர்நாடகம்‌ 1990இல்‌ 2250 டி.எம்‌.சி நீரைப்‌ பயன்படுத்த தமிழகம்‌ மறைமுகமாக ஒப்புக்கொள்ள நேர்ந்தது. 1991இல்‌ நடுவர்‌ மன்றத்‌ தீர்ப்பின்படி 205 டி.எம்‌.சி. நீர்‌ தமிழகத்தின்‌ பங்காக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்‌ 205 டி.எம்‌.சி. அல்ல, ஒரு சொட்டுக்கூட தமிழகத்துக்குக்‌ கிடையாது என்பதுதான்‌ கர்நாடகாவின்‌ நிலை. தனது அணைகளில்‌ அளவு மீறுவதை மட்டுமே திறந்துவிட எண்ணுகிறது கர்நாடகா. 1924இல்‌ 7.5 இலட்சம்‌ ஏக்கரில்‌ சாகுபடியில்‌ ஈடுபட்டு வநத காநாடக மாநிலம்‌. 11.5 இலட்சம்‌ ஏக்கருக்கு மேல்‌ சாகுபடி பரப்பை விரிவுபடுத்தக்‌ கூடாது என 1991இல்‌ நடுவர்‌ மன்றம்‌ இட்ட உத்தரவை மீறி 25 இலட்சம்‌ ஏக்கராக சாகுபடி பரப்பை விரிவாக்கத திட்டமிட்டு செயல்படுகிறது.

அந்தத் திட்டம்‌ படிப்படியாக செயலுக்கு வருமானால், இன்றைய தமிழகத்தில்‌ வண்டு மணல்‌ ஓடும்‌ பல ஆறுகளைப்‌ போல அகண்ட காவிரி நீரோட்டத்தடம்‌ அழிந்த காவிரியாய்‌ மாறிவிடும்‌. இந்த அபாயத்தை கடந்த காலத்தில்‌ முழுமையாக உணராத தமிழக விவசாயிகள்‌ மோட்டார்‌ பம்பு செட்டுகள்‌ மூலம்‌ நிலத்தடி நீரையும்‌ உறிஞ்சிவிட்டனா்‌. நதியில்‌ நீரோட்டமும்‌ இல்லை, நிலத்தடி நீரும்‌ இல்லை என்ற நிலையில்‌ தமிழகம்‌ அவ்வப்போது போர்க்கோலம்‌ பூண்டு நிற்கிறது.

ஒரு நதியின்‌ கீழ்ப்படுகை விவசாயிகளுக்குப்‌ பாசன உரிமை உண்டு என்பதை உலகம்‌ முழுவதும்‌ உள்ள நதி நீர்ப்பகிர்வு சட்டங்கள்‌ ஒப்புக்‌ கொள்ளுகின்றன. ஆனால்‌ நடுவர்‌ மன்றத்‌ தீர்ப்பை மதிப்பதில்லை. உச்சநீதிமன்றத்‌ தீர்ப்புக்குக்‌ கட்டுப்படுவதில்லை என்று கர்நாடக மாநிலம்‌ செயல்படுகிறது.

இந்த முறையற்ற செயலுக்குத்‌ தனது மாநில மக்களைப்‌ பல ஆண்டு காலமாக தயார்‌ செய்து வைத்தவர்கள்‌, அங்குள்ள அரசியல்வாதிகள்‌! அரசியல்‌ ஆதாயம்‌ கருதி தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில்‌ உருவான போராட்டங்களால்‌ இரு மாநில மக்களுக்கும்‌ இடையே பகைமை வளர்ந்துவிட்டது. இது கவலைக்குரியது.

தமிழகததின்‌ விவசாயப்‌ பொருளாதாரம்‌ பாதுகாக்கப்பட வேண்டுமானால்‌, காவிரி நீரைப்‌ பெறுவதில்‌ தமிழகத்துக்கு உள்ள உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்‌. உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம்‌ மதித்து நடக்க வேண்டும்‌. எனினும்‌ தமிழகம்‌ நிரந்தரமாகப்‌ பாதுகாக்கப்பட வேண்டுமானால்‌ கங்கை - காவிரி இணைப்பு முக்கியமானது.

மத்திய அரசு அது பற்றிப்‌ பேசத் தொடங்கி இருப்பது வரவேற்புகுரியது. 3 இலட்சம்‌ டி.எம்‌.சி. நீர்‌ கங்கை நதியில்‌ ஒடுகிறது என்றால்‌, அதில்‌ 75% கூட பயனபடுத்தப்படாமல கடலில் கலக்கிறது. காவிரி - கங்கை இணைப்பு தமிழகத்தின்‌ தென்‌கோடி வரை பாசன வசதிக்கு வழிகோலும்‌. இதனை நிறைவேற்ற சுமார்‌ 35 ஆண்டுகள்‌ ஆகலாம்‌. எனினும்‌ இதற்கான பணிகள்‌ தொடங்க வேண்டும்‌.

நாடுகளுக்கு இடையே வராத நதி நீரா சண்டைகள்‌ ஒரே நாட்டுக்குள்‌ இரு மாநிலங்களுக்கு இடையில்‌ வருவது வெட்கப்பட வேண்டிய ஒன்று! இவற்றைத்‌ தவிர்க்க மாநில அதிகார வரம்புக்குள்‌ உள்ள நதிகளை தேசிய மயமாக்கிவிட வேண்டும்‌. தென்னக நதிகளையும்‌ வட இந்தியாவில்‌ உள்ள நதிகளையும்‌ இணைத்து நதிநீரை வீணாக்காமல்‌ பயன்படுத்த திட்டம்‌ உருவாக்கப்பட வேண்டும்‌. வளமான பாரதத்தில்‌ இத்திட்டம்‌ செயலுக்கு வருமானால்‌ இந்த உலகுக்கே உணவளிக்கும்‌!

இது ஒருபுறம்‌ இருக்க, தமிழக விவசாயிகள்‌ மத்தியில்‌ மழை நீரை வீணாக்காமல்‌ சேகரிக்கும்‌ பழக்கம்‌ ஏற்படவேண்டும்‌. ஏரிகள்‌, குளங்கள்‌, குட்டைகள், கண்மாய்களை தூர்வார வேண்டும்‌. மராமத்துப்‌ பணிகள்‌ செய்ய வேண்டும்‌. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில்‌ அக்கறை செலுத்த வேண்டும்‌. வீடுகள்‌ தோறும்‌ மழைநீர்‌ சேகரிப்புத்‌ தொட்டி அமைக்க வேண்டும்‌.

இது பருவ மழை தவறிப்‌ பெய்யும்‌ காலமாய்‌ இருக்கிறது. எனவே பெய்யும்‌ முழுநீரை வீணாக்கிவிடக்கூடாது. தமிழகத்தில்‌ மழைப்‌ பொழிவை அதிகரிக்க விவசாயிகள் மரங்களை வளர்ப்பதில்‌, காடு வளர்ப்பதில்‌ ஆர்வம்‌ காட்ட வேண்டும்‌.

நாம் செய்யவேண்டியவை

விவசாயிகள்‌ நீர்‌ சிக்கன முறைகளைக்‌ தெரிந்துக்‌ கொண்டு கடைபிடிக்க வேண்டும்‌.
'நாடென்ப நாடா வளத்தகன' என்றார்‌ வள்ளுவர்‌. அந்தவகை வளமான நாட்டுககு நீர்வளம்‌ மிக முக்கியமானது.
இப்போது காவிரியை நம்பிய விவசாயிகள்‌ அனைவரும்‌ குறுவை சாகுபடியைக்‌ கைவிட்டு விட்ட நிலை வந்துவிட்டது. அவர்கள்‌ மாறுபட்ட விவசாய சிந்தனைக்கு மாறவேண்டும்‌.
பாரம்பரியமான ஆறுமாத பயிர்‌, வறட்சியை அல்லது கடும்‌ மழையைத்‌ தாங்கும்‌ நெல்‌ ரகங்களை பயிரிட்டு, ஆரோக்கியமான, நஞ்சற்ற, அதிகப்படியான விளைச்சலை எடுக்க முன்‌ வரவேண்டும்‌.
முப்போக சாகுபடி என்ற கண்ணோட்டம்‌ மாற வேண்டும்‌.
நிலத்துக்கும்‌ ஒய்வு தேவை என்பதை உணர வேண்டும்‌.
மண்ணை வளப்படுத்தும்‌ இயற்கை வழிகளைப்‌ புரிந்து கொண்டால்‌ அதிக விளைச்சல்‌ சாத்தியமே!

0/Post a Comment/Comments

Previous Post Next Post