தமிழக ஆறுகளின் நிலைமை | Condition of Tamil Nadu Rivers

தமிழக ஆறுகளின் நிலைமை | Condition of Tamil Nadu Rivers | செந்தமிழ்‌ நாடெனும்‌ போதினிலே இன்ப‌த் தேன்‌ வந்து பாயுது காதினிலே என்றார்‌ பாரதியார்‌. அந்தச் செந்தமிழ்‌ நாடு வற்றாத நதிகளால்‌ வளமான நாடாய்‌ இருந்தது என்று பாடிப்பாடி பரவசமடைகிறார்‌ பாரதியார்‌. “காவிரி தென்‌ பெண்ணை பாலாறு தமிழ்‌ கண்டதோர்‌ வைகை பொருனை நதி என மேவிய ஆறு பல ஓட திருமேனி செழித்த தமிழ்நாடு'' என்று பாரதியார்‌ வர்ணித்த செந்தமிழ்‌ நாடு இன்று கடும்‌ வறட்சியால்‌ உருவழிந்து கிடக்கிறது.

தமிழக ஆறுகளின் நிலைமை, tamil nadu rivers, kaveri, vaigai, palar, thamirabharani, rivers @tamilfarming
Condition of Tamil Nadu Rivers

தமிழக ஆறுகளின்‌ கரையோரம்‌ சாக்கடை ஓடிக்‌கொண்டிருக்கிறது. காவிரியும்‌, கொள்ளிடமும்‌ கரைபுரண்டோடும்‌ காட்சி, கனவாகி விட்டது. கரையெல்லாம்‌ நீர்‌ வழிய பூ வாடை போர்த்தி அழகு காட்டிய வைகையை சிலப்பதிகாரக்தில் தான்‌ பாக்க முடியும்‌. தமிழக ஆறுகளின்‌ நிலைமை கவலைக்கிடமான உள்ளதை நாம்‌ மிகுந்த கவலையுடன்‌ எண்ணிப்‌ பார்க்க வேண்டியுள்ளது.

தமிழக ஆறுகளின்‌ நிலைமை 

கர்நாடகாவில்‌ உள்ள நந்தி மலையில்‌ தோன்றி தமிழகத்தில்‌ வாணியம்பாடியில்‌ அடியெடுத்து வைத்து செங்கல்பட்டு வழியாக ஓடிவந்து, மாமல்லபுரத்தின்‌ தென்‌ பகுதியில்‌ வங்கக்‌ கடலோடு கலக்கிறது. பாலாற்று நீரை நம்பி சுமார்‌ 11,000 சதுர கி.மீ. பரப்பளவில்‌ சாகுபடி நடந்திருக்கிறது.

வேலூரில்‌ உள்ள தோல்‌ தொழிற்சாலை கழிவுகள்‌ பாலாற்‌றில்‌ கலந்தன. வாலாஜாபாத்தில்‌ ஆரம்பிக்கப்பட்ட முதல்‌ தோல்‌ தொழிற்சாலை தொடங்கி அடுத்தடுத்து உருவான அத்தனை கோல்‌ தொழிற்சாலையின்‌ கழிவுகளும்‌ பாலாற்றில்‌ கலந்தன.

இதைத்‌ தொடர்ந்து பாலாற்று நீரும்‌, பாசன நிலங்களும்‌ பாழாயின. இத்துடன்‌ அப்பகுதி மக்களுக்குக்‌ குடிநீர்‌ பிரச்சனையும்‌ தோன்றியது. இதனால்‌ பாலாற்றைப்‌ பயனபடுத்திப்‌ போடப்பட்ட குடிநீர்‌ திட்டங்களும்‌ கைகூடாமல்‌ போயின.

பாலாற்றங்கரை நிலங்கள்‌ பாதிக்கப்பட்டதால்‌ விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டது. பாலாற்றில்‌ ஒரு சில மாதங்கள்‌ நீரோட்டம்‌ இருக்கும்‌. இப்போது அதுவும்‌ இல்லை. பாலாற்றை ஒட்டிய பகுதிகளில்‌ நிலத்தடி நீர்‌ சுமார்‌ நாற்பத்தைந்து அடி ஆழம்‌ கீழே போய்‌விட்டது. பாலாற்றிலும்‌ லாரி, லாரியாக மணல்‌ எடுக்கப்பட்டு வருவதால்‌ ஆற்றிலும்‌ கூட நிலத்தடி நீர்‌ மட்டம்‌ பெரிதும்‌ கீழே போய்‌ விட்டது.

பாலாற்றில்‌ தோல்‌ தொழிற்சாலைக்‌ கழிவுடன்‌, சாயப்பட்டறை கழிவுகளும்‌ கலக்கின்றன. வெள்ளையங்கிரி மலையில்‌ உருவாகும்‌ நொய்யலாறு 173 கி.மீ. நீளம்‌ கொண்டது. தொய்யலாற்றின்‌ குறுக்கே சிறுவாணி அணை உள்ளது. இதில்‌ திருப்பூர்‌ மற்றும்‌ பிற இடங்களில்‌ உள்ள சாய தொழிற்சாலை, மின்‌ முலாம்‌ பூசும்‌ தொழிற்சாலைக்‌ கழிவுகளும்‌ கலந்து நொய்யலாறு சாக்கடையாகிவிட்டது.

தொய்யலாற்றுப்‌ பாசனத்தில்‌ கழிவுநீர்‌ பாய்ந்த நிலங்கள்‌ யாவும்‌ பாழாயின. நெல்‌, வாமை, மஞ்சள்‌, பருத்தி, சோளம்‌, மிளகு. புகையிலை முதலான எல்லாப்‌ பயிர்களின்‌ விளைச்சலும்‌ அழிந்தது.

திருப்பூரிவிருந்து 20 கி.மீ தொலைவில்‌ தொய்யலாற்றில்‌ கட்டப்பட்டுள்ள அணை 1942-ல்‌ திறந்து வைக்கப்பட்டது. அது இன்றைய தினம்‌ மிகப்பெரிய சாக்கடை நீர்த்தேக்கமாக மாறிவிட்டது.

1987-இல்‌ இந்த சாக்கடை நீர்த்தேக்கம்‌ திறந்து விடப்பட்டபோது நீரெல்லாம்‌ காவிரி ஆற்றில்‌ கலந்து கரூர்‌, புகளூர்‌, முசிறி, குளித்‌தலை, திருச்சி, புதுக்கோட்டை என பல பகுதிகளை பாதித்தது. கழிவு நீரின்‌ விஷத்‌தன்மையால்‌ பயிர்கள்‌ அழிந்தன. கால்நடைகளும்‌ உயிரிழந்தன.

பவானி ஆறும்‌ இன்று பெருமளவில்‌ நாசமடைந்துவிட்டது. இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில்‌ தோன்றி மேட்டுப்பாளையம்‌, சத்தியமங்கலம்‌ வழியாக ஈரோட்டை அடுத்த பவானியில்‌ காவிரி நதியோடு கலக்கிறது. பவானி மூலம்‌ 5000 ஏக்கர்‌ நிலம்‌ பாசன வசதி பெறுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில்‌ பவானியின்‌ மழைநீர்‌ பிடிப்புப்‌ பகுதியிலிருந்த இயற்கை வளம்‌ அழிந்து போய்விட்டது. வனமாக இருந்த இடமெல்லாம்‌ தேயிலை தோட்டமாகவும்‌, காப்பித்‌ தோட்டமாகவும்‌, யூக்கலிப்டஸ்‌ மரக்‌ கூட்டமாகவும்‌ மாறிவிட்டதால்‌ மழை வளம்‌ குன்றியதோடு மலைச்‌ சரிவும்‌, மண்ணரிப்பும்‌ ஏற்பட்டு மண்ணெல்லாம்‌ பவானி ஆற்றில்‌ சேர்ந்து, ஆற்றின்‌ ஆழம்‌ போனது. மண்மேடு அகலமானது.

காப்பி, தேயிலை தோட்டங்களில்‌ பயன்படுத்தப்படும்‌ இரசாயன நஞ்சுக்கள்‌, பூச்சிக்கொல்லி நஞ்சுகள்‌ யாவும்‌ பவானி ஆற்றில்‌ கலந்து விடுகின்றன. ஹிந்துஸ்தான்‌ போட்டோ பிலிம்ஸ்‌ தொழிற்சாலை உட்பட எண்ணற்ற தொழிற்சாலைக்‌ கழிவுகள்‌ பவானியில்‌ கலக்கிறது. இந்தக்‌ கழிவுநீர்‌ விவசாயக்தைப்‌ பெருமளவு பாதித்துவிடுகிறது.

அமராவதி ஆறானது உடுமலைப்‌ பேட்டையில்‌ உள்ள திருமூர்த்தி மலையில்‌ உற்பத்தியாகி, கரூர்‌, ஈரோடு மாவட்டங்களில்‌ பாய்கிறது. கரூரிவிருந்து குளித்தலை செல்லும்‌ வழியில்‌ உள்ள காவேரியில்‌ கலக்கிறது. இந்த ஆறும்‌ அரவக்‌ குறிச்சி, கரூர்‌ பகுதியில்‌ உள்ள சாயப் பட்டறைகளின்‌ கழிவுநீரால்‌ சாக்கடையாகிவிட்டது. இந்தக்‌ கழிவுநீர்‌ நிலத்தடி நீரையும்‌, பாசன வயல்களையும்‌ பாழாக்கி விட்டது.

தமிழகத்தில்‌ குறைவான அளவு மழை பெறும்‌ மாவட்டங்கள்‌ கோயமுத்தூர்‌, ஈரோடு, கரூர்‌ இம்மூன்று மாவட்டங்களில்‌ பாயும்‌ பவானி, நொய்யல்‌, அமராவதி ஆறுகளில்‌ கழிவுநீர்‌ கலந்து விட்டதால்‌ விவசாயம்‌ பெருமளவு பாதித்துவிட்டது.

தாமிரபரணியும் வைகையும்

தாமிரபரணி ஆற்றின்‌ நீளம்‌ 12௦0 கி.மீ. பொதிகை மலையில்‌ உற்பத்தியாகி புன்னைகாயவில்‌ கடலில்‌ கலக்கிறது. இந்த ஆறும்‌ பல்வேறு ஆலைக்‌ கழிவுகளைச்‌ சுமந்து சாக்கடையாகிவிட்டது. வைகை நதியும்‌ கழிவுநீரோடும்‌ ஆறாக காட்சியளிக்கிறது.

விவசாயிகளின் கடமை

ஆறுகள்‌ மாசுபடாமல்‌ காப்பதன்‌ அவசியத்தை உணர்ந்து ஆற்றை பாதுகாக்க விவசாயிகள்‌ முன்வர வேண்டும்‌. மழை வளத்தைப்‌ பெருக்க காடு வளத்தை பெருக்க வேண்டும்‌. மழைக்‌ காலத்தில்‌ கிடைக்கும்‌ ஆற்றுநீர்‌ வீணாகாமல்‌ பாதுகாக்க வேண்டும்‌.

இவைபற்றியெல்லாம்‌ விழிப்புணர்ச்சி பெறுவது விவசாயிகளின்‌ கடமையாகும்‌.

0/Post a Comment/Comments

Previous Post Next Post